இலங்கை

வவுனியா பாவற்குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார். குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜன்சிகா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்நிலையில் இன்று (22.12) மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் தி.திருஅருள், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்