பொழுதுபோக்கு

அறந்தாங்கி நிஷா மற்றும் பாலாவுக்கு சீமான் வாழ்த்து – ஏன் தெரியுமா?

  • January 10, 2024
  • 0 Comments

“அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும் அன்புத்தம்பி பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னின்று செய்த உதவிகளுக்குப் பின்னால் நாம் தமிழர் கட்சி என்ற எங்களின் […]

செய்தி

தென் கொரியாவில் அமுலுக்கு வரும் சட்டம்!

  • January 10, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் நாய்களை இரைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நாய்க் கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் போஷின்தாங் என்ற உணவு வகை தென் கொரியாவில் வயதானவர்களின் விருப்ப உணவாக உள்ள நிலையில், வரும் 2027-ஆம் ஆண்டு அமலாகும் புதிய சட்டத்தின் மூலம் நாய்க் கறி உட்கொள்ளும் முறை முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. புதிய சட்டத்தின் படி, கறிக்காக நாய்களை வெட்டுபவர்களுக்கு 3 ஆண்டுகளும், நாய்க்கறி விற்றால் 2 ஆண்டுகளும் சிறை […]

பொழுதுபோக்கு

இது என்னப்பா புது கெட்டப்பா இருக்கு? மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்

  • January 10, 2024
  • 0 Comments

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தி கோட்’ (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு […]

இலங்கை

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்கு தயாரான 30 பேரை கண்டுபிடித்த பொலிஸார்

  • January 10, 2024
  • 0 Comments

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை உயிர்விட தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் பிரகாரம், இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் குழுவில் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பிக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் […]

ஐரோப்பா

5,000 ஊழியர்ளுக்கு அதிர்ச்சி கொடுத்த லண்டன் வங்கி

  • January 10, 2024
  • 0 Comments

லண்டன் – பார்க்லேஸ் வங்கி அதன் உலகளாவிய பணியாளர்களிடமிருந்து 5,000 ஊழியர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. செலவைக் குறைப்பதற்கும் வங்கியின் லாபத்தை மேம்படுத்துவதற்கும் நிர்வாகிகளால் புதுப்பிக்கப்பட்ட உந்துதலின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வணிகத்தை எளிதாக்குவதற்கும் மறுவடிவமைக்கும் முயற்சியில் கடந்த ஆண்டு 84,000 உலகளாவிய பணியாளர்களில் இருந்து சுமார் 5,000 பாத்திரங்கள் நீக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை தற்போது அதன் மொத்த பணியாளர்களில் 5% ஆகும். வேலை வெட்டுக்கள் உண்மையான பணிநீக்கங்கள் மற்றும் காலியிடங்களின் கலவையாக இருக்கும் […]

வாழ்வியல்

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு! ஆபத்தில் சிக்கும் இளைஞர்கள்

  • January 10, 2024
  • 0 Comments

குளிர்காலத்தில் பல தொற்றுநோய்கள், காய்ச்சல், சளி, வைரஸ் தொற்று உள்ளிட்ட பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும். புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குளிர்காலம், மோசமான வாழ்வியல் முறை ஆகியவற்றின் காரணமாக குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் மாரடைப்பு: புது டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹாஸ்பிடல்ஸ் இதய ஆரோக்கிய நிபுணர் பால்பிர் சிங் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நாட்டில் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதுவும் குளிர்காலத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு – கண்காணிக்கப்படவுள்ள பல்பொருள் அங்காடிகள்

  • January 10, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இது தொடர்பில் ஆஸ்ஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், பல்பொருள் அங்காடிகள் லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக நுகர்வோர் மீது அழுத்தம் […]

இலங்கை

2024ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

  • January 10, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டிற்கான மிகவும் பிரபலமான 10 தனிப் பயண சுற்றுலா இலக்குகளுக்கான பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதென பிரபல வணிக சஞ்சிகையான ஃபோர்ப்ஸ் தரப்படுத்தலில் தெரியவந்துள்ளது. 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட சுற்றுலாப் பயணிகளை சிறு குழுவாக இணைத்து அவர்களுக்கான பயணங்களை ஏற்பாடு செய்யும் ஃப்ளாஷ் பேக் என்ற நிறுவனத்தின் அண்மைய கணக்கெடுப்புக்கமைய இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் தனிப் பயணிகளுக்கு நான்காவது மிகவும் பிரபலமான இடமான இலங்கை, பயணிகளுக்கு மெதுவான தொடருந்து […]

விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?

  • January 10, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் குறித்து வெளியான தகவல்

  • January 10, 2024
  • 0 Comments

இன்றைய இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றாக யூடியூப் திகழ்கிறது. இன்றைய சமூகத்தில் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்துகின்றன. வயது வரம்பு இன்றி அனைத்து தரப்பினர் மத்தியிலும் சமூக ஊடகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்திய சமூகத்தில் சமூக உரையாடல்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. அதே சமயம் டிஜிட்டல் உரையாடல்கள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சமூகத்தின் முக்கிய அங்கமாக மாறிப்போன சமூக ஊடகங்களில் அதிக பயனாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு முதல் இடத்தில் […]