ஐரோப்பா

நேட்டோ இராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி திடீர் விஜயம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , லிதுவேனியாவின் வில்னியஸ் நகருக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். வரும் நாட்களில் லாட்வியா மற்றும் எஸ்டோனியாவுக்குச் செல்வதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மூன்று பால்டிக் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கை தேர்தல்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு!

  • January 10, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் செப்டெம்பர் மாதமும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவிற்கு அறிவித்துள்ளார். நேற்று (09.01) பிற்பகல் குறித்த குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது. ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு […]

பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம் இதோ..

  • January 10, 2024
  • 0 Comments

தனுஷ் கெரியரில் கேப்டன் மில்லர் திரைப்படம் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில், மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஒரு பக்கம் கமர்ச்சியால் சினிமாவையும், மறுபக்கம் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஸ் உள்ளிட்ட பலரும் […]

இலங்கை

மட்டக்களப்பு ஊடாக செல்லும் ரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!

  • January 10, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு மார்க்கத்தில் செல்லும் ரயில் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கனமழையுடன் ரயில் பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக ரயில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை

ஐக்கிய இராச்சியத்தின் அரச இளவரசி அன்னே இலங்கை விஜயம்!

  • January 10, 2024
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தின் அரச இளவரசி அன்னே, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (01.10) இலங்கை வந்துள்ளார். அவர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 504 இல் இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி அன்னே வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிரித்தானிய அரச குடும்பத்தின் முதல் வருகை இது என்பதும் சிறப்பு. இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இளவரசி ஆனி, கண்டியில் […]

இந்தியா

கர்நடாகாவில் குழந்தையைப் பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி: காரணமானவரை வலைவீசி தேடும் பொலிஸார்!

  • January 10, 2024
  • 0 Comments

தும்கூரில் சமூக நலத்துறை விடுதியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், மதுகிரி சமூக நலத்துறை விடுதியில் 14 வயதுடைய மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாகேபல்லி தாலுகாவில் உள்ள கண்ணம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது தாய்க்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து […]

ஆசியா

அந்தமானில் இன்று அதிகாலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி!

  • January 10, 2024
  • 0 Comments

அந்தமான் தீவில் கடந்த 10 நாட்களில் 2வது முறையாக இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த மக்கள் உடனடியாக தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் மறுநாள் 2ம் […]

இலங்கை

எதிர்வரும் இரண்டு மாதங்களில் கடன் வழங்குனர்களுடனான உடன்பாட்டை எட்ட முடியும் – நந்தலால் வீரசிங்க!

  • January 10, 2024
  • 0 Comments

நாட்டின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் எதிர்வரும் 2 மாதங்களில் வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் கொள்கை உடன்படிக்கையை எட்ட முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த கொள்கை அறிக்கையை இன்று (10.01) சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயன்பாட்டுத் துறையின் செலவு-பிரதிபலிப்பு விலை நிர்ணயம், முக்கியமாக பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார வாரியத்தால் நடத்தப்படும் […]

பொழுதுபோக்கு

லால் சலாம் படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு

  • January 10, 2024
  • 0 Comments

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. அதனால் லைகா நிறுவனம் அவர்களது இன்னொரு படமான ‘மிஷன் சாப்டர் 1’ படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 9ம் தேதி லால் சலாம் படம் ரிலீஸ் ஆகிறது. ரஜினிகாந்த் கெஸ்ட் […]

இலங்கை

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!

  • January 10, 2024
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (10.01) ஆளணி பற்றாக்குறையை நிவர்த்திகுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாண சபைக்கு சொந்தமான குறித்த வைத்தியசாலை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மத்திய அரசாங்கத்திற்கு கீழ் உள்வாங்கப்பட்டதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை புதிய சிற்றூழியர்களை நியமிக்கப்படவில்லை எனவும் புதிய ஊழியர்களை நியமிக்குமாறும் கோரி இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களில் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளதாகவும் […]