இலங்கை

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்கு தயாரான 30 பேரை கண்டுபிடித்த பொலிஸார்

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை உயிர்விட தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் பிரகாரம், இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் குழுவில் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பிக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேர் தீவிரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்