உலகம் செய்தி

CIA இயக்குனர் Moscow பயணம்: பின்னணி என்ன?

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தொடர் சந்திப்புகள் தொடர்பான தகவல்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelenskiy தெரிவித்துள்ளார்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற தொடர் சந்திப்புகள் தொடர்பான தகவல்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelenskiy தெரிவித்துள்ளார்.

” கடந்த சில நாட்களாக மாஸ்கோவில் (Moscow) நடைபெற்ற சந்திப்புகள் தொடர்பான தகவல்களை அமெரிக்க தரப்பிடமிருந்து இன்று நாம் பெற்றுக்கொண்டோம். அங்கு பல முக்கிய சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன” என்று ஸெலென்ஸ்கி தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அந்தச் சந்திப்புகளில் யார் கலந்துகொண்டார்கள் என்பது பற்றிய விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.

“தகவல்களைப் பகிர்ந்தமைக்கும், ரஷ்யாவுடனான உரையாடலில் கடைப்பிடிக்கப்பட்ட தேவையான அணுகுமுறைக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

நோட்டோ (NATO) அமைப்பில் உள்ள உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் எச்சரிக்கையை வழங்கும் நோக்கில், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (CIA) இயக்குனர் John Ratcliffe மாஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (The Wall Street Journal) கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இச்செய்தியை கிரெம்ளின் மாளிகை நிராகரித்துள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நோட்டோ நாடு மீது தாக்குதல் நடத்தமாட்டார் எனக் கூறி, ரட்க்ளிஃபின் பயணம் குறித்த ஊடக அறிக்கைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி