இந்தியா

ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்துக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய நபர்களுடன் நடைப்பயணத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் நடைப்பயணத்துக்கு முன்பு அனுமதி மறுக்கப்பட்டது மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குறித்த பட்டியலையும் மணிப்பூர் அரசு கோரியுள்ளது. நடைப்பயணத்துக்கான ஒப்புதலுக்காக 8 நாள்கள் காங்கிரஸ் காத்திருந்த நிலையில், 9வது நாள் நிபந்தனைகளுடன் அனுமதி கிடைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரி […]

இலங்கை

இலங்கை : கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்ட அமைச்சர்கள்!

  • January 10, 2024
  • 0 Comments

துறைமுக அதிகாரசபையின் இரண்டு சிறிய படகுகளில் 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுகத்தில் உல்லாச சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று பிற்பகல் துறைமுக இராஜாங்க அமைச்சர்  பிரேமலால் ஜயசேகர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒதுக்கப்பட்ட இரண்டு கப்பல்கள் மூலம் இந்த இன்பப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழுவிற்கு அனைத்து உணவு மற்றும் பானங்கள் துறைமுக அதிகாரசபையால் வழங்கப்பட்டுள்ளன. புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு துறைமுக வளாகத்தில் […]

உலகம்

பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல்: பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட அறிவிப்பு

இந்திய வம்சாவளியினர் உட்படமோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சப்- போஸ்ட்மாஸ்டர்களுக்கு புதிய முன்பணமாக 75,000 பவுண்டுகள் வழங்குவதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக பலர் இழப்பீட்டுக்கு என காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் விடுதலை மற்றும் இழப்பீடு கோருபவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையில் கையொப்பமிட வேண்டும் என்று தபால் துறை அமைச்சர் கெவின் ஹோலின்ரேக் […]

இந்தியா

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணி நன்கொடை

அயோத்தி ராமர் கோயிலுக்கு 2,400 கிலோ எடையுள்ள மணியைப் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் திகதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு எட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசர் நகரில் ரூ.25 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்கள்) மூலம் 2,400 கிலோ எடையுள்ள பிரமாண்டமான மணி […]

இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கையின் பலப்பகுதிகளில் மழை!

  • January 10, 2024
  • 0 Comments

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது. இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, மொனராகலை, […]

உலகம்

வடகொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆயுத பரிமாற்றம்: வெளியான கண்டன அறிக்கை

வட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஆயுத பரிமாற்றங்களை கண்டித்தது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் பிற கூட்டாளி நாடுகள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இதில் ரஷ்யா வட கொரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கியது மற்றும் டிசம்பர் 30 மற்றும் ஜனவரி 2 அன்று உக்ரைனுக்கு எதிராக மாஸ்கோ பயன்படுத்தியது உட்பட அடங்கும். மேலும் ஐரோப்பா, கொரிய தீபகற்பம், இந்தோ-பசிபிக் பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் இந்த ஒத்துழைப்பு ஏற்படுத்தும் […]

இலங்கை

இலங்கை : ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தகரின் மகன் கைது!

  • January 10, 2024
  • 0 Comments

35 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சோனி என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். குறித்த வர்த்தகர் கொரியர் சேவை ஊடாக கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை வடமத்திய மாகாணத்தில் பாரியளவில் கடத்துவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிலைய கட்டளைத் தளபதி பிரதம பரிசோதகர் இந்திக வீரசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய கண்காணிப்பு கடமைகளை மேற்கொண்டு சுவிசலின் வீடு […]

உலகம்

லெஸ்போஸ் அருகே புலம்பெயர்ந்தோர் இருவரின் சடலங்கள் உட்பட 18 பேர் மீட்பு

பலத்த காற்றுக்கு மத்தியில் கிரேக்க தீவான லெஸ்போஸ் அருகே குடியேறிய படகு கவிழ்ந்து குறைந்தது புலம்பெயர்ந்தோர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கிரேக்க கடலோர காவல்படை இரண்டு பேரின் உடல்களை மீட்டதாகவும், தீவுக்கு அருகில் 18 புலம்பெயர்ந்த நபர்களை மீட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. படகில் சுமார் 36 நபர்கள் இருந்ததாக கருதப்பட்டது, தற்போது கரையில் உள்ளவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் தரமான சம்பவம் லோடிங்… என்ன தெரியுமா?

  • January 10, 2024
  • 0 Comments

கமல் ஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து இந்தியன் 2 வெளியாகவிருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார் கமல் ஹாசன். தக் லைஃப் படத்தின் இன்ட்ரோ வீடியோ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் […]

இந்தியா

கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போதே பொறியியலாளர் மாரடைப்பால் மரணம்..!(வீடியோ)

  • January 10, 2024
  • 0 Comments

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியைச் நேர்ந்த பொறியியலாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நொய்டா பொறியியலாளர் விகாஸ் நேகி என்பவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவராவார். இவர் உடலை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். இந் நிலையில் நொய்டா பகுதியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த அவர், ஓட்டங்களை எடுக்க முற்பட்டபோது, சக வீரரிடம் கைகுலுக்கி விட்டு அப்படியே மைதானத்தின் நடுவே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் […]