இலங்கை செய்தி

குறைந்தபட்ச ஊதியம் பெறும் இலங்கையர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.

பூட்டானுக்கு அடுத்தபடியாக தெற்காசிய நாடுகளில் இலங்கையர்களே மிகக் குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறுகிறார்கள் என Visual Capitalist இணையத்தளம் வெளியிட்டுள்ள ஒரு தரவரிசையில் தெரியவந்துள்ளது.

இந்தத் தரவரிசையின்படி, ஒரு இலங்கையருக்கான குறைந்தபட்ச ஊதியம் 200 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பூட்டானியருக்கான குறைந்தபட்ச ஊதியம் 180 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான ஊதியத் தரவு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசையை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற தெற்காசியப் பிராந்திய நாடுகள் இலங்கையை விட உயர்ந்த தரவரிசையில் உள்ளன.

Visual Capitalist இணையதளம் 130 நாடுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசையை உருவாக்கியுள்ளது.

இதில் இலங்கை 120-வது இடத்திலும், பூட்டான் 122-வது இடத்திலும் உள்ளன.

மாலைதீவுகள் 67வது இடத்திலும், பாகிஸ்தான் 68வது இடத்திலும், நேபாளம் 78வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 88வது இடத்திலும், பங்களாதேஷ் 89வது இடத்திலும் இந்தியா 111வது இடத்திலும் உள்ளன.

இந்தத் தரவரிசையின்படி, வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில்,இந்தியாவில் குறைந்தபட்ச மாத ஊதியம் 233 அமெரிக்க டொலர்களாகவும், பங்களாதேசில் 379 அமெரிக்க டொலர்களாகவும், பாகிஸ்தானில் 570 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.

ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்ச ஊதியம் 393 அமெரிக்க டொலர்களாகவும், நேபாளத்தில் 490 அமெரிக்க டொலர்களாகவும், மாலைதீவில் 587 அமெரிக்க டொலர்களாகவும் இருக்கிறது.

இந்த ஒப்பீட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் 2024-ஆம் ஆண்டுக்குரியவையாகும்.

சர்வதேச அளவில், ஆசியாவில் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது, அதன் மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில் 2,362 டொலர் ஆகும். சுவிட்சர்லாந்து உலகில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியமாக 3,804 டொலரை வழங்குகிறது.

அதைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை