வாழ்வியல் விளையாட்டு

முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!

  • January 11, 2024
  • 0 Comments

இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது பயிற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். விராட் […]

இலங்கை

கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்

  • January 11, 2024
  • 0 Comments

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொரதொட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முகத்தை முழுவதுமாக மறைக்கு ஹெல்மெட் அணிந்திருந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் அவரது தலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் – நம்பிக்கை இழந்த மக்கள்

  • January 11, 2024
  • 0 Comments

பிரான்ஸில் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்ரியல் அத்தால் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் அவர் மீது நம்பிக்கை இல்லை என 52 சதவீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். Elisabeth Borne பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட பல்வேறு விமர்சங்களை அடுத்து, திங்கட்கிழமை புதிய பிரதமராக 34 வயதுடைய கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) நியமிக்கப்பட்டார். இந்நிலையில், “புதிய பிரதமர் சிறப்பாக செயற்படுவார் என உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புத்தம் புதிய பொருளை அறிமுகம் செய்யும் Apple

  • January 11, 2024
  • 0 Comments

Apple நிறுவனம் 2015ஆம் ஆண்டில் Apple கடிகாரம் அறிமுகம் செய்த நிலையில் அதன்பின் நிறுவனம் தற்போது புத்தம் புதிய பொருளை விற்கவுள்ளது. Vision Pro எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பச் சாதனம் அடுத்த மாதம் 2ஆம் திகதி அமெரிக்காவில் விற்கப்படும். பார்ப்பதற்குப் பாதுகாப்புக் கண்ணாடியைப்போல் இருக்கும். சாதனத்தைப் போட்டுக்கொண்டால் திரையில் தென்படும் காட்சி வெளியுலகில் இருப்பதைப்போல் தோன்றும். பயனீட்டாளர்கள் அவ்வாறு இணையத்தளங்களுக்குச் செல்லமுடியும். உரையாடல் செயலிகளைப் பயன்படுத்தமுடியும். கண்ணாடி போட்டுக்கொண்டாலும் வெளியுலகில் இருப்போர் பயனீட்டாளர்களின் கண்களைப் பார்க்கமுடியும். Vision […]

ஐரோப்பா

உலகிலேயே மெதுவாக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் முதலிடம் பிடித்த லண்டன்

  • January 11, 2024
  • 0 Comments

உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டனில் மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக தெரியவந்து. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய லண்டனில் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம்டாம் என்ற இருப்பிடம் கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 […]

இலங்கை செய்தி

எம்.பி.க்கள் குழு ஒன்று கப்பலில் விருந்து குறித்து துறைமுக அதிகாரசபையின் விளக்கம்

  • January 11, 2024
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து தொடர்பில் அண்மையில் வெளியான ஊடக செய்திகளை மறுப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்கள் பலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் […]

இலங்கை

இலங்கையில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

  • January 11, 2024
  • 0 Comments

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது 50 கிரேம் ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளனர். மன்னாறில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேளை யுக்திய திட்டத்திற்கு அமைவாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை வில்கம் விகாரை பகுதியில் வைத்து சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 50 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலுக்கு வந்துள்ள நடைமுறைகள்!

  • January 11, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தண்டபணம் அறவிடப்படும் என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனவரி முதலாம் திகதியில் இருந்து பிளாஸ்டிக் போத்தல்களுக்கு 25 சென்ட் தண்ட பணம் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் வருமான வரி கட்டுகின்றவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 11 784 யூரோ உழைக்கும் பொழுது அவர்கள் அதற்கு மேற்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பதும் புதிய சட்டத்தின் விளக்கமாகும். இதேவேளையில் கிண்ட பிரைக்பெற்றாக் என்று சொல்லப்படுகின்ற வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளை காட்டி […]

ஆசியா

சிங்கப்பூரில் 25,000 பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

  • January 11, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் சுமார் 25,000 பயணிகள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சோதனைச் சாவடிகளில் 300க்கும் அதிகமான ஆபத்தான பொருள்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் உள்துறை, சட்ட அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். பாதுகாப்புச் சோதனைகள் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்து நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் பயணிகள் வருவதற்குமுன் அவர்களை அனுமதிக்கமுடியுமா என்பதை முடிவுசெய்வதாகவும் சண்முகம் கூறினார். பயணிகளிடம் […]

இலங்கை

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி

  • January 11, 2024
  • 0 Comments

களுத்துறை சுற்றுலா விடுதியொன்றில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நடத்திய விசாரணையில் இதனை உறுதிப்படுத்தினார். உயிரிழந்த வெளிநாட்டவர் சுகயீன நிலையில் இருப்பதாகவும், 8ஆம் திகதி முதல் உணவு எடுக்க வரவில்லை என்றும், ஹோட்டல் நிர்வாகம் அவரைச் சோதனையிடச் சென்றபோது, ​​வெளிநாட்டவர் படுக்கையில் இறந்து கிடந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர் 67 வயதான அமெரிக்கர் ஆவார். பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஓட்டல் நிர்வாகம் விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக […]