செய்தி

இலங்கையில் இருந்து வெளிநாடு சென்ற பெண் – தாய்க்கு நேர்ந்த கதி

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச் சென்ற தனது மகளின் நிலை குறித்து விசாரிக்க சென்ற தாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முகவர் நிலைய ஊழியர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

குருணாகல் பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையமொன்றின் மூலம் குவைத் நாட்டுக்கு சென்ற மகளை பற்றி விசாரிக்கச் சென்ற தாயை அந்நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தாய் இது தொடர்பில் குருணாகல் பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து குருணாகல் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, சவூதி அரேபியாவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட 40 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயின் சடலம் நேற்று முன்தினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி