அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள்!
சிகாகோவில் கொள்ளையர்களால் இந்திய மாணவர் தாக்கப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையது மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். இவர் பிப்.4ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆயுதம் தாங்கிய 4 கொள்ளையர்கள் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து சையது தப்பியோடியுள்ளார். ஆனால், கொள்ளையர்கள் அவரை துரத்திச் சென்று தாக்கி சையதுவின் […]













