191 பேரின் உயிரை அழித்ததாக மதத் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு
கென்ய மதப் போதகர் பால் மெக்கன்சி மற்றும் அவரது 29 கூட்டாளிகள் மீது 191 குழந்தைகளைக் கொன்று புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வனப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மெக்கன்சி தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு வழங்கிய அறிவுரையைப் பற்றிய விஷயங்கள் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டன. அவர் தனது சீடர்களுக்கு “தங்கள் குழந்தைகளுடன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க” உத்தரவிட்டார். உலகம் அழியும் முன் அவர்கள் சொர்க்கம் செல்ல முடியும் என்று கூறியிருந்தார். “ஷகாஹோலா” காட்டில் சுமார் […]













