உலகம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் விபத்தில் உயிரிழப்பு!

  • February 7, 2024
  • 0 Comments

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா ஹெலிகாப்படர் விபத்தில் நேற்று (06.02) உயிரிழந்தார். 74 வயதான பினேரா 03 பேருடன் ஹெலிகாப்டரில் பயணித்த நிலையில், விபத்தில் சிக்கியுள்ளார். மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்த சிறிது நேரத்திலேயே முன்னாள் ஜனாதிபதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்ற மூன்று பயணிகள் உயிர் தப்பினர். அவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மூன்று நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

வட அமெரிக்கா

குடிபோதையில் நிர்வாணமாக புளோரிடா விமான நிலையத்திற்குள் வலம் வந்த ஆசாமி..!

  • February 7, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த ஒரு நபர், நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்ததுடன், அவரை விட்டு விலகிச் சென்றனர் விமான நிலைய முதலாவது முனையத்தின் செக்-இன் பாதை வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவர், பின்னர் விமான நிலைய டி.எஸ்.ஏ. பாதுகாப்பு பாதை நோக்கி நடந்து சென்றார். பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்று, […]

பொழுதுபோக்கு

ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’!

  • February 7, 2024
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. இதற்காக மார்ச் மாத இறுதிக்குள் படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஷங்கரின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘இந்தியன் 2’ பாகத்திற்கான அனைத்துக் கட்டப் படப்பிடிப்பு வேலைகளும் நிறைவடைந்துள்ளன. […]

இலங்கை

சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கவினால் அவரது கணவரின் மரணம். தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் இருப்பதாகத் தெரிவித்து மேற்படி முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி அதிகாலை கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.01 கிலோமீற்றர் மைல்கல் அருகில், கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற […]

இலங்கை

இலங்கை : பொதுபோக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதிய முயற்சி!

  • February 7, 2024
  • 0 Comments

பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகம் பயன்படுத்தும் 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், 17.00 முதல் 19.00 மணி வரையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

இராணுவ அணிதிரட்டல் மசோதா: உக்ரைன் பாராளுமன்றில் நிறைவேற்றம்

இராணுவ அணிதிரட்டல் விதிகளை இறுக்கும் மசோதாவை உக்ரைன் பாராளுமன்றம் முதலில் வாசித்து நிறைவேற்றியுள்ளது. “இது இறுதி முடிவு அல்ல. இரண்டாவது வாசிப்பு இருக்கும், அதற்கு முன் மாற்றங்கள் செய்யப்படும்,” என்று சட்டமியற்றுபவர்களில் ஒருவரான Oleksiy Honcharenko டெலிகிராமில் தெரிவித்துள்ளார். 24 பிப்ரவரி 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது ஜனாதிபதி முதலில் இராணுவச் சட்டம் மற்றும் பொது அணிதிரட்டலை அறிவித்தார். அதன்பிறகு இந்த நடவடிக்கை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக அரிசி விநியோகம் : இலங்கை அரசின் அறிவிப்பு!

  • February 7, 2024
  • 0 Comments

2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆக இருந்த வரவு செலவுத் திட்ட முதன்மை பற்றாக்குறையானது 2023 ஆம் ஆண்டில் முதன்மை வரவு செலவுத் திட்ட உபரியை உருவாக்க முடிந்தது என்று ஜனாதிபதி கூறினார். இலங்கை சுதந்திரமடைந்து 76 வருடங்களில் முதன்மையான வரவு செலவுத்திட்ட உபரியை உருவாக்குவது இது 6வது தடவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 09வது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (07.02) இதனை […]

இலங்கை

வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழ்நாட்டில் தஞ்சம்!

  • February 7, 2024
  • 0 Comments

பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தனுஸ்கோடியை சென்றடைந்துள்ளனர். கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்நிலையில் வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ரந்த மொத்தமாக […]

இலங்கை

விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக பலி! 7 பேர் வைத்தியசாலையில்

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகின் மீன் தொட்டிக்குள் விஷ வாயுவை சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் விஷ வாயுவை சுவாசித்த 08 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய 7 மீனவர்களும் தற்போது பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இலங்கை

இலங்கை : நுவரெலியாவின் தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து வெளியான அறிவிப்பு!

  • February 7, 2024
  • 0 Comments

வரலாற்றுப் பெறுமதி மிக்க நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று (07.02) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவதை தடுக்க உத்தரவிடுமாறு கோரிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகம் டி ஆப்ரூ இந்த அறிவித்தலை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தபால் நிலைய கட்டிடத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான […]