இலங்கை

இரத்தினபுரி – மகனின் மரணத்திகாக அசிட் வீசிய தந்தை!- ஐவருக்கு எரிகாயம்

  • March 6, 2024
  • 0 Comments

வழக்கு விசாரணைக்காக வந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர், வீதியில் பயணித்த அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரியின் புதிய நகரத்தில் 2023 ஆம் […]

வட அமெரிக்கா

கனடாவில் தூக்க கோளாறுக்கு சிகிச்சை பெற சென்ற பெண் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்

  • March 6, 2024
  • 0 Comments

கனடாவில் தூக்க கோளாறு நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவராலேயே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார்.டர்ஹம் பிராந்திய பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்காப்றோவின் ஒஷாவா தூக்க கோளாறு சிகிச்சை நிலையத்திற்கு சென்ற பெண்ணே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் நோயாளியிடம் தகாத வார்த்தைகளை பேசியதாகவும் தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காப்றோவைச் சேர்ந்த 51 […]

இந்தியா

இந்தியாவில் நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவை ஆரம்பம்!

இந்தியாவின்  நீருக்கு அடியிலான முதலாவது மெட்ரோ தொடருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். கொல்கத்தாவின் கிழக்கு – மேற்கு மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் ஆகிய நகரங்களுக்கு இடையே நீருக்கு அடியில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 4.8 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கத்தில் ஹுக்ளி என்ற ஆற்றை கடக்க தரையிலிருந்து 32 மீற்றர் ஆழத்தில் 520 மீற்றர் நீளத்துக்கு இந்த மெட்ரோ தொடருந்து மார்க்கத்தில் சுரங்கம் […]

பொழுதுபோக்கு

பிறந்தநாளில் வருங்கால காதல் கணவருடன் அவுட்டிங்… வரலட்சுமி பகிர்ந்த புகைப்படம்!

  • March 6, 2024
  • 0 Comments

தனது பிறந்தநாளன்று வருங்கால காதல் கணவருடன் அவுட்டிங் சென்றிருக்கிறார் நடிகை வரலட்சுமி. அந்த சமயத்தில் அவருடன் எடுத்த மிரர் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லவ்’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த மார்ச்1 அன்று நடிகை வரலட்சுமிக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. 14 வருடகால நண்பருடன் நிச்சயம் முடித்துள்ள நடிகை வரலட்சுமிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில்தான், வரலட்சுமிக்கு நேற்று 39ஆவது பிறந்தநாள். இதற்காக அவர் தனது […]

ஆசியா

நேபாளம்; கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த பஸ் – எழுவர் பலி, 30 பேர் படுகாயம்!

  • March 6, 2024
  • 0 Comments

நேபாள நாட்டில் பஸ் ஒன்று, தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 48 பேர் பயணம் செய்தனர்.அப்போது, தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடினர். இந்த நிலையில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கினர். […]

இலங்கை

கலவானை பிரேதச்சில் வழுக்கி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு..!

  • March 6, 2024
  • 0 Comments

பாடசாலையில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்த மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இந்த விபத்து இன்று (06) காலை 7.15க்கும் 7.30க்கும் இடையில் கலவானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடையவராவார்.வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற போது, மாணவி வழுக்கி விழுந்துள்ளார். இதன்போது அருகில் இருந்த ஒன்றரை அடி கொங்கிரீட் கல் அவரது கன்னத்தில் பலமாக மோதியது.இதில் பலத்த காயமடைந்த மாணவி […]

ஐரோப்பா

பொதுமக்கள் குண்டு துளைக்காத அங்கிகளை அணிவதைத் தடை செய்ய ஸ்வீடன் காவல்துறை கோரிக்கை

பொதுமக்கள் குண்டு துளைக்காத அங்கிகளை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்று ஸ்வீடன் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது தெற்கு ஸ்வீடனில் உள்ள பொலிசார் குண்டு துளைக்காத உள்ளாடைகளை அணிவதைத் தடை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 15 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட, அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், நகரங்கள் மற்றும் நகரங்களில் பாதுகாப்பு உள்ளாடைகளை அணிந்து வருகின்றனர், ஸ்வீடனில் இளைய தலைமுறையினரை கும்பல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இந்தியா

டெல்லி – மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த ‘கை’

  • March 6, 2024
  • 0 Comments

டெல்லியில், ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த பெயிண்டருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. டெல்லியை சேர்ந்த 45 வயதான பெயிண்டர் ஒருவர், கடந்த 2020ம் ஆண்டில் ரயில் விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தார். பெயிண்டர் தொழிலுக்கு கைகளே பிரதானம் என்பதாலும், அவற்றை இழந் துவிட்டிருந்ததாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து, வேறு எந்த வேலையும் செய்ய இயலாமல் முடங்கி கிடந்தார். இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை […]

இலங்கை

“ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” : நூல் வெளியிடுகின்றார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகுறித்து நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி” என்ற தலைப்பில் எனது புத்தகம் வெளியிடப்படுவதை அறிவிக்க விரும்புகிறேன். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் […]

பொழுதுபோக்கு

மீண்டும் “எஞ்சாயி எஞ்சாமி” பாடல் சர்ச்சை – சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்

  • March 6, 2024
  • 0 Comments

ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற எஞ்சாயி எஞ்சாமி பாடல் மூலம், தனக்கு ஒரு பைசா கூட வருமானம் கிடைக்கவில்லை என்று இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், “தெருக்குரல்” அறிவு எழுதிய இப்பாடல் சுயாதீன ஆல்பமாக வெளியானது. இதனை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி இருந்தார். சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய மாஜா தளத்தின் யூ-டியூப் சேனில் இப்பாடலின் உரிமையை பெற்றிருந்தது. இதற்கு யூ-டியூப் தளத்திலும் […]