ஐரோப்பா

புட்டினுக்கு எதிராக தேர்தல் நாளில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ரஷ்யர்களுக்கு அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா, மார்ச் 17 அன்று நண்பகல் தேர்தல் நாள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவும், ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக வாக்களிக்கவும் ரஷ்யர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதிலும் உள்ள நகரங்களில் தேர்தல் நாளில் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டமாக வந்து கைது செய்யும் ஆபத்து இல்லாமல் மக்கள் போராட்டத்தை பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு யூடியூப் வீடியோவில், பிப்ரவரி 16 அன்று ஆர்க்டிக் தண்டனைக் காலனியில் இறந்த தனது […]

பொழுதுபோக்கு

குட்டித் தளபதி இயக்கும் படத்தின் ஹீரோ இந்த நடிகரின் மகனா?

  • March 6, 2024
  • 0 Comments

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும், படத்தின் ஹீரோ பற்றிய புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த போதும், தன்னுடைய தாத்தாவை போல் ஒரு இயக்குனராக தான் ஆவேன் என, சினிமா மேக்கிங் குறித்த படிப்பை லண்டனில் படித்து முடித்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பியதும் தன்னுடைய முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜேசன் சஞ்சய் […]

ஆசியா

கடல் வழியாக காசா பகுதிக்குள் உதவிகள் நுழைய அனுமதிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் முதல் முறையாக, கடல் வழியாக காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை நுழைய அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸால் நிதியுதவி அளிக்கப்படும் என்றும், பரந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை ஏற்றிய கப்பலை முதலில் சைப்ரஸுக்கு அனுப்பும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உதவி பின்னர் இஸ்ரேலிய பிரதிநிதிகளால் பரிசோதிக்கப்பட்டு காசா கடற்கரையில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியின் முதல் சோதனை அடுத்த வாரம் தொடங்கும் ரம்ஜான் மாதத்திற்கு முன்னதாக நடைபெற […]

இலங்கை

இரு வெவ்வேறு இடங்கிளில் மயங்கி விழுந்து இருவர் மரணம்!

  • March 6, 2024
  • 0 Comments

மயங்கி விழுந்து மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையில், புதன்கிழமையும் (06) இதுவரையில் மயங்கிவிழுந்து இருவர் மரணித்துள்ளனர். கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் புதன்கிழமை (06) தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சட்சராணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், […]

பொழுதுபோக்கு

சீமான் வழக்கில் நடிகை விஜயலட்சுமிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி

  • March 6, 2024
  • 0 Comments

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில் வரும் 19ம் தேதி ஆஜராக வேண்டும் என நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், […]

உலகம்

சுற்றுலா சென்றவர்களை மிரட்டி போரில் ஈடுபடுத்தும் ரஷ்ய ராணுவம்- உதவி கோரியுள்ள இந்திய இளைஞர்கள்

  • March 6, 2024
  • 0 Comments

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுற்றுலாவுக்காக ரஷ்யா சென்றதில், அந்நாட்டு ராணுவத்தின் வலையில் சிக்கி உக்ரைன் போர் முனையில் நிறுத்தப்பட்டுள்ளதாக, தாய் நாட்டிடம் உதவி கோரி உள்ளனர். சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ ஒன்று, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த7 பேரின் கோரிக்கையை பதிவு செய்துள்ளது. ராணுவத்தினர் அணியும் குளிர்கால சீருடையுடன் தென்படும் அந்த இந்திய இளைஞர்கள், தங்களது இக்கட்டான நிலையை விவரித்தும், இந்திய அதிகாரிகளின் உதவியை கோரியும் வீடியோ செய்தியை பதிவு செய்துள்ளனர். […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் வீடொன்றில் சடலமாகக் மீட்கப்பட்ட சீக்கிய பெண்! – வெளியான விபரங்கள்

  • March 6, 2024
  • 0 Comments

இங்கிலாந்திலுள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சீக்கிய பெண்ணின் பெயர் முதலான விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, காலை 6.00 மணியளவில், இங்கிலாந்தின், Beaconsfield என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டார்கள். அப்போது, அந்த வீட்டில் பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது, அந்தப் பெண்ணின் பெயர் பரம்ஜித் கோஷல் கில் (40) என பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். அத்துடன், பரம்ஜித்தின் கணவரான பால் கில் (39) கைது […]

இலங்கை

களுகஹகந்துர பிரதேசத்தில் மாணவியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

  • March 6, 2024
  • 0 Comments

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அதேநேரம் சந்தேக […]

பொழுதுபோக்கு

குணா பட ஹீரோயின் ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவோட சொந்த அக்காவா?

  • March 6, 2024
  • 0 Comments

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் அசுர வெற்றி கமல் ஹாசனின் “குணா” படத்தை பற்றிய பல கதைகளை அலசி ஆராய உதவியாக மாறியிருக்கிறது. “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது” என கமல்ஹாசன் இளையராஜா இசையில் பாடி நடித்த காட்சிகள் பேசப்பட்டு வரும் நிலையில், அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷினி யார் என்றும் குணா படத்துக்கு பிறகு அவர் ஏன் எந்த படத்திலும் நடிக்கவில்லை போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது. […]

இலங்கை செய்தி

இலங்கை தொடர்பில் சர்வதேச நிதி நிறுவனங்களின் கணிப்பு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

  • March 6, 2024
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்ததாகவும் கடந்த வருடம் முதன்மைக் கணக்கில் உபரியைப் பெற முடிந்ததாகவும் […]