இலங்கை செய்தி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி பலி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, முன்தினம் மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையிலிருந்த புளியம்பழத்தை எடுத்து விளையாடியவாறு சாப்பிட்டபோது, புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கிச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்ட குடும்பத்தினர், சிறுமியை உடனடியாக லொறி ஒன்றில் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை