இலங்கை செய்தி

காட்டு யானையால் ஏற்பட்ட விபத்து: 10 பேர் காயம்

சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில்  வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று பேருந்தைத் தாக்கியுள்ளது.

இதனால்பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். பேருந்து கவிழ்ந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை