செய்தி விளையாட்டு

வரலாற்று சாதனை: இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பந்துவீச்சில் ஹேட்ரிக் உட்பட 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

நிலக்ஷிகா சில்வா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.

ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை

நாணய சுழற்சியில் வென்ற இந்தோனேசிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

மெதுவான ஆடுகளத்தில் இலங்கை அணியின் முன்னணி பேட்டர்கள் ரன் குவிக்கச் சிரமப்பட்டனர்.

பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களை மட்டுமே பெற்ற இலங்கை, இன்னிங்ஸின் நடுப்பகுதியில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முன்வரிசையில் சஞ்சனா கவிந்தி (15) மட்டுமே இரட்டை இலக்க ரன்களைப் பெற்றார்.

மீட்டெடுத்த நிலக்ஷிகா சில்வா

62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது, நிலக்ஷிகா சில்வா அணியை மீட்பதற்குப் பொறுப்புடன் ஆடினார்.

கவ்யா கவிந்தியுடன் இணைந்த அவர், ஏழாவது விக்கெட்டுக்காக 36 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். 35 பந்துகளில் தனது 3-ஆவது சர்வதேச டி20 அரைசதத்தைப் பூர்த்தி செய்த நிலக்ஷிகாவின் அதிரடியால், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 124 ரன்களை எட்டியது.

சமரி அத்தப்பத்துவின் வரலாற்று சாதனை

125 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலளித்த இந்தோனேசிய அணி, முதல் 2 ஓவர்களில் 16 ரன்களைச் சேர்த்தது. இருப்பினும், சமாரி அதபத்து சுழற்பந்து வீச்சில் களம் இறங்கியதும் போட்டி இலங்கையின் பக்கம் மாறியது.

தொடர்ந்து விக்கெட்டுகளைச் சரித்த அதபத்து, 19-ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளிலும் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஹேட்ரிக் சாதனை படைத்தார்.

இறுதியில் இந்தோனேசிய அணி 18.3 ஓவர்களில் 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி