பொழுதுபோக்கு

கொரோனா லாக்டவுனில் வெளிவந்த உண்மை… சம்யுக்தா வாழ்வில் நடந்தது என்ன?

  • March 22, 2024
  • 0 Comments

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் சம்யுக்தா. கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ரயான் என்கிற மகனும் இருக்கிறார். தற்போது தனது மகனுடன் தனியாக வசித்து வரும் சம்யுக்தா, தன் கணவரை பிரிந்ததற்கான காரணத்தை வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது கணவர் உடனான பிரிவு குறித்து முதன்முறையாக மனம் விட்டு பேசி உள்ளார் சம்யுக்தா. சம்யுக்தாவின் கணவர் கார்த்திக் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். […]

இலங்கை

ஜனாதிபதியினால் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

  • March 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது. ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட […]

பொழுதுபோக்கு

சூது கவ்வும்-2… பட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  • March 22, 2024
  • 0 Comments

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் இடைநீக்கம்!

  • March 22, 2024
  • 0 Comments

இஸ்ரேலின் ஆங்கில மொழி அரசாங்க செய்தி தொடர்பாளர் எய்லோன் லெவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவி, சமூக ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இங்கிலாந்து அரசாங்கத்துடனான சர்ச்சையைத் தொடர்ந்து அரசாங்கத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் Lord Cameron உடனான சமீபத்திய ஒன்லைன் தகராறுடன் அவர் தொடர்புப்பட்டிருந்தார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் பத்திரிகைக்கு உறுதி செய்துள்ளது. எப்படியிருப்பினும் இதற்கான காரணத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இதுவரையில் தெரிவிக்கவில்லை. […]

பொழுதுபோக்கு

அஜித் தெலுங்கு தயாரிப்பாளரை தேடி ஓடியது 163 கோடிக்காகத்தானா? குட் பேட் அக்லி நியு அப்டேட்

  • March 22, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிக்க, வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கின்றனர். படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்னரே அஜித்தின் அடுத்த பட அப்டேட்டும் வெளியானது. அதன்படி அவரின் 63-வது படத்திற்கு குட் பேட் அக்லி என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் தகவல் வழங்குவோருக்கு வெகுமதி

  • March 22, 2024
  • 0 Comments

இலங்கையில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதி தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தீர்மானத்தின் பிரகாரம் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரீ56 ரக துப்பாக்கி குறித்து தகவல் அளிப்பவருக்கு 500,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அத்துடன், தானியங்கி ஆயுதங்கள் அல்லது கைத்துப்பாக்கிகளுக்கு 300,000 ரூபாவும், ரிவோல்வருக்கு 250,000 ரூபாவும் வெகுமதியாக வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை

வவுனியாவில் வர்த்தக நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!

  • March 22, 2024
  • 0 Comments

வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

வாழ்வியல்

ஒற்றைத் தலைவலி அலட்சியம் வேண்டாம்

  • March 22, 2024
  • 0 Comments

தீராத ஒற்றைத்தலைவலிக்காக மருத்துவமனை வந்தவரிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது மூளையில் நிறைந்திருந்த நாடாப்புழுக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நடப்பு வாழ்க்கைச் சூழலின் தலையாய உடல் உபாதைகளில் ஒன்றாக தலைவலி விளங்குகிறது. சூடான டீ/காபி, இசை, தூக்கம் அல்லது தலைவலி தைலம் என எளிமையான முறையில் அப்படியான தலைவலியை தாண்டி வருவோர் அதிகம். ஆனபோதும் மைக்ரேன் என்ற பெயரில் மண்டையிடியாய் வலி கண்டவர்கள் பாடு சொல்லி மாளாது. அப்படியானவர்கள் மருத்துவ உதவியை நாடுவது அவசியம். அமெரிக்காவில் அவ்வாறு […]

ஐரோப்பா

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்குமாறு உத்தரவு!

  • March 22, 2024
  • 0 Comments

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து தானிய இறக்குமதிக்கு வரி விதிக்க ஐரோப்பிய ஆணையம் அதன் உறுபு நாடுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சிமாநாட்டின் தொடக்க நாளின் முடிவில் பேசிய வான் டெர் லேயன், மேற்படி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ரஷ்யாவின் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பெறப்பட்ட பொருட்களின் இறக்குமதி மூலம் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை சீர்குலைப்பதை தடுக்கும் எனக் கூறினார். “ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் […]

விளையாட்டு

IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த 5-வது தமிழ் வீரர்

  • March 22, 2024
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் அந்த அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு சென்றதால் கில் […]