ஐரோப்பா

ரஷ்யா தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் தொடர்புள்ளதா? வெளியான தகவல்!

  • March 23, 2024
  • 0 Comments

ரஸ்யா மீது முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கும் உக்ரைனுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாக கீய்வ் அறிவித்துள்ளது. தாக்குதல்தாரிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது நான்கு பேரை கைது செய்துள்ளதாக ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ள நிலையில், இந்த கருத்துக்கள் வந்துள்ளன. இந்நிலையில் “உக்ரைன் தொடர்பான ரஷ்ய சிறப்பு சேவைகளின் பதிப்புகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் அபத்தமானவை” என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உதவியாளரான மைக்கேலோ போடோலியாக், X இல் பதிவிட்டுள்ளார். சில ரஷ்ய […]

இலங்கை

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு: கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம்

கனேடிய தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • March 23, 2024
  • 0 Comments

கனேடிய அரசாங்கம் அடுத்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி  திட்டமிடப்பட்ட தேசியத் தேர்தலை ஒரு வாரத்திற்கு மாற்ற முன்மொழிந்துள்ளது. வாக்குப்பதிவை  அக்டோபர் 27 ஆம் திகதி மாற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த நாளில் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற நிலையில், அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்ராறியோ மாகாணத்தில் முனிசிபல் தேர்தல்கள் நடைபெற்றது. இதன்போது வாக்களிப்புகள் கணிசமாக குறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகம்

டெலிகிராம் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தும் ஸ்பெயின்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அனுமதியின்றி பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தை பதிவேற்ற அனுமதிப்பதாக ஊடக நிறுவனங்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, நாட்டில் செய்தியிடல் செயலியான டெலிகிராமின் சேவைகளை நிறுத்தி வைக்க ஸ்பெயின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Atresmedia , EGEDA, Mediaset மற்றும் Telefonica உள்ளிட்ட ஊடக நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்து, ஸ்பெயினில் டெலிகிராம் பயன்பாடு திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சாண்டியாகோ பெட்ராஸ் ஸ்பெயினில் டெலிகிராமின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டார் டெலிகிராமின் சேவைகளைத் தடுப்பது […]

ஆசியா

டிக்டொக்கை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதும் தைவான்!

  • March 23, 2024
  • 0 Comments

தைவானின் டிஜிட்டல் விவகார அமைச்சர் ஆட்ரி டாங், சீனாவை தளமாக கொண்டு இயங்கும் TikTok ஐ தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விவரித்துள்ளார். வெளிநாட்டு எதிரிகளுடனான தளத்தின் தொடர்பு அமெரிக்காவின் முன்னோக்குடன் ஒத்துப்போகிறது என்று டாங் வலியுறுத்தினார். தைவானின் தரநிலைகளின்படி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தக்கூடிய எந்தவொரு தயாரிப்பும் தேசிய தகவல் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸை குறிவைத்து அமெரிக்க […]

ஆசியா

போர் நிறுத்த ஒப்பந்தத்தினை வீட்டோ செய்த ரஷ்யா மற்றும் சீனா: கடுமையாக கண்டிக்கும் அமெரிக்கா

பணயக்கைதிகள் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா மற்றும் சீனாவால் வீட்டோ செய்யப்பட்டுள்ளது நேற்று பதினொரு சபை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு வாக்களித்தனர் ; ரஷ்யா, சீனா மற்றும் அல்ஜீரியா இதற்கு எதிராக வாக்களித்தன மற்றும் கயானா வாக்களிக்கவில்லை. போர்நிறுத்தம் செய்வது குறித்து சர்வதேச சமூகத்திற்கு “அவசர உணர்வை” காட்ட அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குடிமக்களைப் பாதுகாக்கும் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க […]

இலங்கை

இலங்கையில் முகக் க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • March 23, 2024
  • 0 Comments

கொழும்பின் பகுதிகளில் பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுதும் அழகு சாதனை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித ஜயசுந்தர தெரிவித்திருந்தார். பெண்கள் தங்களை அழகுபடுத்தும் நோக்கில் ஆபத்தான கிரீம்களை பயன்படுத்துவதால புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ‘Chandni’ எனும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் கிரீம்களில் ஈயம் அதிகளவு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாதரசத்தின் அளவும் அதிகம், கென்டியம் […]

பொழுதுபோக்கு

அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்த “அமேசான் ப்ரைம் வீடியோ”

  • March 23, 2024
  • 0 Comments

ஓடிடி தளத்தில் முதன்மை தளமான அமேசான் ப்ரைம் வீடியோ மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் “ப்ரைம் வீடியோ பிரசண்ட்ஸ்” என்ற விழாவை நடித்தினர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர். 2024 ஆம் ஆண்டில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் என்னனென்ன படங்கள் இடம்பெற போகிறது என்பதை அறிவிப்பதற்காகவே இந்த விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் அடுத்த ஆண்டு வெளியாகும் 69 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பற்றிய […]

ஐரோப்பா

மாஸ்கோ துப்பாக்கி சூடு: உக்ரைன்னுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

  • March 23, 2024
  • 0 Comments

மாஸ்கோ மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருந்தால் அதற்கு காரணமானவர்களை கருணையற்ற முறையில் அழிக்க வேண்டும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெதுடேவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மாஸ்கோவின் இசை அரங்கில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில், குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த ISIS-K என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் […]

இலங்கை

அடுத்த வாரம் சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை பிரதமர்!

பிரதமர் தினேஸ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பெய்ஜிங்கின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சபையின் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மார்ச் 25 முதல் 30 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை செலுத்த வேண்டிய […]