ஆசியா

மலேசியாவில் கையடக்க தொலைபேசி சார்ஜருக்காக அடித்துக் கொல்லப்பட்ட மாணவன்

  • March 23, 2024
  • 0 Comments

மலேசியாவில் தொழிற்கல்லூரியில் தவறான புரிதல் காரணமாக விடுதி மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 17 வயதான மாணவர் ஒருவர் நேற்றைய தினம் தங்கும் அறை ஒன்றில் காலை 6.50 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து கல்லூரி இயக்குனரிடம் இருந்து பொலிஸார் அறிக்கை பெற்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர், என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒரு அறிக்கையில் கூறினார். முதற்கட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக […]

ஐரோப்பா

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் மோசமாக நடத்தப்பட்ட உணவகம்! 27,000 பவுண்ட் அபராதம்

  • March 23, 2024
  • 0 Comments

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் சவுத்ஹோல் பகுதியில் நடத்தி செல்லப்பட்ட Cash & Carry என அழைக்கப்படும் உணவத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மிக மோசமான தரத்தில் நிர்வகிக்கப்பட்டமையினால் இந்த மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈலிங் உணவுப் பாதுகாப்புக் குழுவினர் இந்த உணவகம் தொடர்பில் பல வருடங்களாக கண்கானித்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 43 சவுத் வீதியில் உள்ள சிரா Cash & Carry உரிமையாளர்கள் மற்றும் மேலாளருக்கு […]

ஐரோப்பா

பாரிஸில் மது அருந்திக்கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • March 23, 2024
  • 0 Comments

பாரிஸில் வாடிக்கையாளர் ஒருவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள மதுபான விடுதியில் நபர் ஒருவர் தனது நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த வேளையில், அவரை நெருங்கிய மற்றொரு வாடிக்கையாளர் அவர் மீது மதுபானத்தினை ஊற்றி அவரை அவமதிக்கும் வகையில் திட்டியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர் ஓரினச்சேர்க்கையாளர் எனவும், அதன் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி […]

செய்தி

இலங்கையில் கணவனின் சடலத்திற்காக மோதிக்கொண்ட மனைவிகள்

  • March 23, 2024
  • 0 Comments

பாணந்துறையில் உயிரிழந்த தொழிலதிபரின் சடலத்திற்கு சட்டத்தரணி மனைவியும், அரசாங்க எழுத்தாளர் மனைவியுமான 2 மனைவிகள் உரிமை கோரியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பான சூழலையடுத்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரபல மலர் சாலையில் சடலத்தை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றதாகவும் அவர் இறக்கும் போது இரண்டாவது திருமணத்தில் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை

  • March 23, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவிக்க ஒன்லைன் பதிவேட்டில் முதல் பதிவு செய்யலாம். இப்போது வரை, மக்கள் அத்தகைய முடிவை காகிதத்தில் அல்லது உறுப்பு நன்கொடையாளர் அட்டையில் மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் அவ்வாறு செய்ய முடியும் என்றாலும், ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் இது அத்தகைய ஆவணங்களை இழக்கும் அல்லது கண்டுபிடிக்க முடியாமல் போகும் […]

ஆசியா

ஆசியாவின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை பெற்ற சிங்கப்பூர்

  • March 23, 2024
  • 0 Comments

ஆசியாவின் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சிங்கப்பூர் பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிங்கப்பூர் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான (World Happiness) நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகளவில் கணக்கெடுக்கப்பட்ட 143 இடங்களில் சிங்கப்பூர் 30வது இடத்தை பிடித்தது. ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஐந்து தரவரிசைகள் குறைவாக சிங்கப்பூர் பெற்றுள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பட்டியலில் பின்லாந்து முதலிடத்திலும், […]

இலங்கை செய்தி

இலங்கையில் தீவிரமடையும் பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • March 23, 2024
  • 0 Comments

இலங்கையில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் அவதானமாக செயற்படுமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்தார். தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறி என அவர் குறிப்பிட்டார். அதிக வியர்வை மற்றும் ஈரளிப்பான இடங்களில் இந்த நோய் வேகமாக பரவுமென வைத்தியர் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் முதல் முறையாக அமுலாகும் கட்டுப்பாடு – புலம்பெயர்ந்தோருக்கு அதிர்ச்சி

  • March 23, 2024
  • 0 Comments

கனடா வரலாற்றிலேயே முதல் முறையாக, கனடாவில் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிக்கும் கட்டுப்பாடு விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுவருவதாக கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளில், கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக, செப்டம்பரில் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டுப்பாடு சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என மில்லர் சுட்டிக்காட்டியுள்ளா். தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்படுவோரின் […]

யாழ்.தாவடியில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டூழியம்

  • March 22, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டவர்களை , வீட்டின் உரிமையாளர் , வீட்டின் முன் நின்று தகராறில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அதனால் கோபமடைந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டனர். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தகராறில் […]

பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகை

  • March 22, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு , இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நகையை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு […]