உலகம்

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம்: ஐ.நா எச்சரிக்கை!

  • March 23, 2024
  • 0 Comments

ஹமாஸுடனான போருக்கு மத்தியில் காசா பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளமை இஸ்ரேலை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியின் கடுமையான முற்றுகையை பராமரிக்கிறது. இது உதவி பொருட்கள் சென்றடைவதை தடுக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 150 டிரக்குகளை அனுமதித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பட்டினி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் சில பகுதிகளில் ஏற்கனவே  பஞ்சம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் […]

ஐரோப்பா

மொஸ்கோ தாக்குதல் தொடர்பாக 11 சந்தேகநபர்கள் கைது!

  • March 23, 2024
  • 0 Comments

தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு முக்கிய சந்தேக நபர்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, தாக்குதலில் உயிரிழந்த ஒருவரின் உறவினர்களுக்கு உள்ளூர் கரன்சியில் 3 மில்லியன் ரூபிள் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபிள் வழங்குவதாக ரஷ்ய அரசு […]

இலங்கை

வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

  • March 23, 2024
  • 0 Comments

வவுனியாவில் ரி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் பாேதைப் பாெருளுடன் இளைஞன் ஒருவர் நேற்று (22.3) கைது செய்யப்பட்டுள்ளதாக  செட்டிகுளம் பாெலிசார் தெரிவித்தனர். வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்காெள்ளப்பட்ட விசேட சாேதனையி்ன் பாேது செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியில் ரி56 துப்பாக்கி ரவைகள் 13 உம் 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய […]

செய்தி

கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

  • March 23, 2024
  • 0 Comments

பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (23.03) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரஜை வெனிசுலாவை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து  கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும்  132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம்

மாஸ்கோ- தீவிரவாதிகள் தாக்குதலில் 60 பேர் பலி… கடும் கண்டனம் விடுத்த பிரதமர் மோடி !

  • March 23, 2024
  • 0 Comments

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள இசை அரங்கில் நேற்று மாலை அதிநவீன துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி பயங்கரமாக சுட்டுத்தள்ளினர். சுமார் 5 பேர் கொண்ட கும்பல், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் இசை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. போர்க்களம் போல் […]

இலங்கை

மைத்திரிபால சிறிசேன தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

  • March 23, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23.03) முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அந்த அறிக்கைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் . “இது இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. நாட்டு மக்கள் […]

இந்தியா

வேலைக்கு சென்ற தொழிலாளியை துரத்தி துரத்தி அடித்துக் கொன்ற யானை!

  • March 23, 2024
  • 0 Comments

குடகு மாவட்டத்தில் கோபி தோட்டத்துக்கு இன்று வேலைக்குச் சென்ற தொழிலாளியை காட்டு யானை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், குடகு பகுதியில் திரியும் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதி, தோட்டங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. குடகு மாவட்டத்தில் யானைகள் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன், விராஜ்பேட்டை தாலுகா செனங்கி அருகே உள்ள அப்பூர் கிராமத்தில் கோபி தோட்டத்தில் வேலை செய்து […]

இலங்கை

கனடாவில் இருந்து வெளியேறும் புலம்பெயர்ந்தோர்!

  • March 23, 2024
  • 0 Comments

கனடாவிற்கு புலம் பெயர்ந்து செல்லும் பலர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய அட்லாண்டிக் பேர் ஆண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் […]

ஐரோப்பா

விமர்சனங்களை எழுப்பியுள்ள அதிபர் மேக்ரானின் குத்துச்சண்டை புகைப்படங்கள்..

  • March 23, 2024
  • 0 Comments

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது. சமீப காலமாக மேக்ரான் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

இலங்கை

வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து வெளியான அறிவிப்பு!

  • March 23, 2024
  • 0 Comments

வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை இன்றி நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். இதன்படி விபத்து நடந்த ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்து அதிகபட்ச இழப்பீடு தொகையாக  5 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் குறிப்பிட்டார். […]