பொழுதுபோக்கு

38 வருடம் ஓடிப்போச்சி… இளையராஜா – வைரமுத்து பிரிவின் பின்னணி என்ன தெரியுமா?

  • March 24, 2024
  • 0 Comments

இசைஞானி இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்து 37 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது ஏன் என்பது குறித்து பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.. வைரமுத்துவை இளையராஜாவிடம் அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அவரது இயக்கத்தில் கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார் வைரமுத்து. அப்படத்தின் கம்போசிங் போது மெட்டுக்கு பாட்டு எழுதுவீர்களா என இளையராஜா கேட்க, முயற்சி செய்கிறேன் என சொல்லிவிட்டு, பாடல் வரிகளை […]

இலங்கை

ஆபத்தான நிலையில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை – ஷெஹான் சேமசிங்க!

  • March 24, 2024
  • 0 Comments

பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (23.03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர், தொலைநோக்குப் பார்வை உள்ளவர் முக்கியப் பிரச்சினையாக இருக்க வேண்டும், ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து […]

இலங்கை

மைத்திரியிடம் வாக்குமூலம் பெற்ற குற்றப் புலனாய்வு பிரிவினர்…

  • March 24, 2024
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டியில் கடந்த (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, , ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான உண்மை தனக்கு தெரியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!

  • March 24, 2024
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால் மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 60 ரூபாவால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்த நிலநடுக்கம்

  • March 24, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட பகுதியாக பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது தான் அதற்குக் காரணமாகும். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா […]

இலங்கை

யாழில் கேரள கஞ்சாவுடன் இரு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் கைது!

  • March 24, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் நேற்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா இதன்போது கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

  • March 24, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் இந்த விலை பதிவாகியுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.63 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.659 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வாழ்வியல்

தினமும் 30 கிராம் சியா விதைகள் – உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • March 24, 2024
  • 0 Comments

சியா விதைகள், நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்நிலையில் இது முக்கியமாக உடல் எடை குறைக்க உதவுகிறது. இந்நிலையில் இந்த சியா விதைகள், தண்ணீரை உள்வாங்கிக்கொண்டு, வயிற்றில் விரிவடையும். இதில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இந்நிலையில் தினமும் 30 கிராம் எடுத்துகொண்டால், உடல் எடை குறைக்க இது உதவியாக இருக்கும், என்று 2015 வெளியான ஆய்வு கட்டுரை கூறுகிறது. இந்நிலையில் 2 ஸ்பூன் சியா விதைகளில் 10 கிராம் நார்சத்து உள்ளது. இந்நிலையில் இதை […]

பொழுதுபோக்கு

சூர்யாவின் கங்குவா டீசர் செய்த சாதனை

  • March 24, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இயக்குநர் சிவா இயக்கும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்த டீசர் மேக்கிங் மற்றும் வி.எஃப்.எக்ஸ். வேலைகளுக்காக பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அனிமல் படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த […]

அறிந்திருக்க வேண்டியவை

எதிர்வரும் சில ஆண்டுகளில் உலகளவில் ஏற்படவுள்ள மாற்றம்

  • March 24, 2024
  • 0 Comments

எதிர்வரும் சில ஆண்டுகளில் உலகளவில் கருத்தரிப்பு விகிதங்கள் குறையக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று அதனைத் தெரிவித்துள்ளது. 2050ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நாடுகளில் போதுமான அளவுக்குக் குழந்தைகள் பிறக்காமல் போய்விடும் என்று அறிக்கை குறிப்பிட்டது. அதனால் அத்தகைய நாடுகளில் மக்கள்தொகை குறையக்கூடும். செர்பியா, ஜப்பான், தென்கொரியா முதலிய நாடுகளில் கருத்தரிப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில் ஆப்பிரிக்கா போன்ற குறைந்த வருமான நாடுகளில் பிறப்பு விகிதம் […]