விளையாட்டு

IPL Match 04 – 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

  • March 24, 2024
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் – ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் […]

ஐரோப்பா

இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்களை தாக்கி அழித்த உக்ரைன்

இன்று அதிகாலை கிரிமியன் தீபகற்பத்தில் இரண்டு பெரிய ரஷ்ய தரையிறங்கும் கப்பல்களைத் தாக்கியதாக உக்ரேனிய இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் கருங்கடலில் ரஷ்ய கடற்படை பயன்படுத்தும் தகவல் தொடர்பு மையம் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. “உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் அசோவ் மற்றும் யமல் பெரிய தரையிறங்கும் கப்பல்கள், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள ரஷ்ய கருங்கடல் கடற்படையின் பல உள்கட்டமைப்பு வசதிகளை வெற்றிகரமாக தாக்கின” என்று உக்ரைன் இராணுவம் […]

பொழுதுபோக்கு

தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

  • March 24, 2024
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் தற்போது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவல் நிறைவடையவுள்ளது. சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களத்தை ஞானவேல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த மாதத்திலேயே தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூன் மாதத்தில் தான் துவங்கும் […]

உலகம்

யுனைடெட் ஏர்லைன்ஸ் சம்பந்தமான மேற்பார்வையை அதிகரிக்க நடவடிக்கை!

  • March 24, 2024
  • 0 Comments

யுனைடெட் ஏர்லைன்ஸ் தொடர்பான மேற்பார்வையை அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கடுமையாக மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் சமீபத்திய நாட்களில் விமான நிறுவனத்தின் தலைமையுடன் எடுக்கக்கூடிய தற்காலிக நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயல்முறைகள், கையேடுகள் மற்றும் வசதிகளை மதிப்பாய்வு செய்வதற்காக வரும் வாரங்களில் யுனைடெட்டின் மேற்பார்வையை அதிகரிக்க ஏஜென்சி திட்டமிட்டுள்ளதாக செய்தி குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா

வெங்காய ஏற்றுமதி தடையை நீடித்த இந்தியா

இந்தியா வெங்காய ஏற்றுமதி மீதான தடையை காலவரையின்றி நீட்டித்துள்ளது இதன்னால் சில வெளிநாட்டு சந்தைகளில் அதிக விலையை அதிகரிக்க உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளரான இந்தியா விதித்துள்ள தடை டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்தது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து உள்ளூர் விலை பாதியாகக் குறைந்துள்ளதால், இந்த சீசனில் […]

இலங்கை

இலங்கை திறைசேரியின் அனுமதியின்றி செலவிடப்பட்ட பெருந்தொகையான பணம்!

  • March 24, 2024
  • 0 Comments

ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளை வழங்குவதில் திறைசேரியின் அனுமதியின்றி இலங்கை முதலீட்டுச் சபை பணம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022ஆம் ஆண்டு தொடர்பான தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த வருடத்தில் இலங்கை முதலீட்டுச் சபை திறைசேரியின் அனுமதியின்றி ஊழியர்களுக்கான போனஸ் உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 61 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. போனஸ் கொடுப்பனவுகளுக்காக கிட்டத்தட்ட 07 கோடி ரூபாயும், ஏனைய கொடுப்பனவுகளுக்காக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்!-12 வயது சிறுவன் கைது

  • March 24, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பதின்பருவ பெண்னை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Kent என்ற இடத்தின் Sittingbourne பகுதியில் பதின்பருவ பெண்ணை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெள்ளிக்கிழமை, Adelaide Drive என்ற இடத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.சம்பவ இடத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் இருந்த teenage பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு […]

இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் செல்போன் வெடித்ததால் பற்றி எரிந்த வீடு: 4 குழந்தைகள் பலி!

  • March 24, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேசத்தில் செல்போன் திடீரென வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன. இருப்பினும் சில நேரங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக அடிக்கடி செல்போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, செல்போன் […]

பொழுதுபோக்கு

“ஜீனி”.. வெளியானது ஜெயம் ரவி படத்தின் பர்ஸ்ட் லுக்

  • March 24, 2024
  • 0 Comments

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இருந்தபோதிலும் அவரது இறைவன் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. எனினும் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அதில் ஜீனி படமும் ஒன்று. இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பேன்டசி திரில்லராக ஜீனி படம் உருவாகியுள்ளது. படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, கிருத்தி ஷெட்டி, […]

ஆசியா

பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் அக்டோபர் 7 தாக்குதலுக்கு நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் பதாகைகளுடன் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். வீட்டின் மீது பாராகிளைட் பறக்கவிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 32,142 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 74,412 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாஸால் நடத்தப்படும் காசா சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன