இலங்கை செய்தி

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்படும் சாத்தியம்

  • April 28, 2024
  • 0 Comments

வாகன இறக்குமதிக்கான தடையை அடுத்த வருட ஆரம்பத்தில் நீக்குவதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு திறைசேரிஅதிகாரிகளைக் கொண்ட குழு எதிர்வரும் வாரத்தில் முன்வைக்கத் தயாராகும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடை நீக்கப்படும் என அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார். வாகன இறக்குமதி தடையை நீக்குவதா இல்லையா என்பது […]

இலங்கை செய்தி

காதலியின் வீட்டுக்குச் சென்ற வாலிபரை காணவில்லை – குடும்பத்துடன் யுவதி தலைமறைவு?

  • April 28, 2024
  • 0 Comments

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தனது காதலி என கூறிக்கொள்ளும் யுவதியின் வீடொன்றுக்கு சென்ற முப்பது வயதுடைய ஆண் ஒருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆண் காணாமல் போன நாளிலிருந்து அவனது காதலி எனக் கூறிக்கொண்ட யுவதி தனது தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள் இருவர் வசித்த வீட்டை பூட்டிவிட்டு பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், யுவதியின் உறவினர் ஒருவரும் அந்த பகுதியை விட்டு […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து தங்கம் கடத்திய 2 பெண்கள் உட்பட மூவர் கைது

  • April 28, 2024
  • 0 Comments

கிளிநொச்சியில் 04 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கார் ஒன்றினை மறித்து சோதனையிட்டனர். அதன் போது காரினுள் இருந்து 04 கிலோ தங்கத்தை மீட்டுள்ளனர். அதனை அடுத்து காரில் பயணித்த இரு பெண்கள் மற்றும் கார் சாரதி ஆகிய மூவரையும் கைது […]

ஐரோப்பா செய்தி

நாஜி சின்னங்களைக் காட்டிய ரஷ்ய இசைக்குழு உறுப்பினர்கள் கைது

  • April 28, 2024
  • 0 Comments

நன்கு அறியப்பட்ட ரஷ்ய மெட்டல் இசைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவில் கைது செய்யப்பட்டு “நாஜி சின்னங்களை” காட்சிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 19, 42 மற்றும் 57 வயதுடைய மூன்று இசைக்குழு உறுப்பினர்கள் “நாஜி அணிகலன்கள் அல்லது சின்னங்களின் பிரச்சாரம் அல்லது பொது வெளிப்பாடு” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று மேற்கு நகரமான நிஜ்னி-நோவ்கோரோடில் உள்ள பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. “தேசிய காவலரின் ஆதரவுடன் காவல்துறை அதிகாரிகள் நிஜ்னி-நோவ்கோரோட்டின் கிளப்பில் ஒன்றில் […]

ஐரோப்பா செய்தி

அலெக்ஸி நவல்னிக்காக வீடியோ தயாரித்த ரஷ்ய பத்திரிகையாளர்கள் கைது

  • April 28, 2024
  • 0 Comments

மறைந்த அலெக்ஸி நவல்னியின் அணிக்காக வீடியோக்களை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு ரஷ்ய பத்திரிகையாளர் “தீவிரவாதத்திற்காக” ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எப்போதாவது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து தடுத்து வைக்கப்பட்ட கான்ஸ்டான்டின் கபோவுக்குப் பிறகு, AP க்காக பணியாற்றிய செர்ஜி கரேலின், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டாவது பத்திரிகையாளர் ஆவார். ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களான Moskva 24 மற்றும் MIR மற்றும் பெலாரஷ்ய செய்தி நிறுவனமான Belsat […]

ஆசியா செய்தி

உலகின் மிகப்பெரிய விமான நிலைய கட்டுமான பணிகளை ஆரம்பித்த துபாய்

  • April 28, 2024
  • 0 Comments

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு புதிய முனையத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக துபாய் அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட $35 பில்லியன் செலவில் “உலகின் மிகப்பெரியதாக” மாறும் என்று வளைகுடா எமிரேட்டின் ஆட்சியாளர் கூறினார். “அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையத்திற்கான வடிவமைப்புகளுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம், மேலும் 128 பில்லியன் AED ($34.85 பில்லியன்) செலவில் கட்டிடத்தை கட்டத் தொடங்குகிறோம்,” என்று துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – தமிழகம் கப்பல் சேவை மீளவும் ஆரம்பம் – திகதியும் அறிவிப்பு

  • April 28, 2024
  • 0 Comments

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் […]

இலங்கை செய்தி

யாழ்.சாவகச்சோியில் பாடசாலை மாணவியை காணவில்லை

  • April 28, 2024
  • 0 Comments

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக நேற்றைய தினம் சனிக்கிழமை வீட்டில் கூறிச் சென்ற மாணவி இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியைச் சேர்ந்த மாணவியே காணாமல் போயுள்ளார். மாணவி காணாமல் போனமை தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து […]

இலங்கை செய்தி

இலங்கையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அறுவை சிகிச்சை

  • April 28, 2024
  • 0 Comments

நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான சத்திரசிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக செய்யப்பட்டுள்ளது. தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

உமா ஓயா திட்டத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு குறித்து நாளை ஆய்வு

  • April 28, 2024
  • 0 Comments

உமா ஓயா திட்டத்தில் இருந்து இரண்டரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்கள் குழுவொன்று நாளை விசேட அவதானத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. மண்சரிவு அபாயத்தைக் குறைக்கும் வகையில், மலையகத்தில் அதிகளவு தேங்கும் நீரை குறுகிய கால முறைகள் மூலம் கீழே இறக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதுளை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். தற்போது, ​​எல்ல – கரந்தகொல்ல பிரதேசத்தில் சுமார் இரண்டு […]