இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் – தமிழகம் கப்பல் சேவை மீளவும் ஆரம்பம் – திகதியும் அறிவிப்பு

தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது.

அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை