இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலிருந்து தங்கம் கடத்திய 2 பெண்கள் உட்பட மூவர் கைது

கிளிநொச்சியில் 04 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கார் ஒன்றினை மறித்து சோதனையிட்டனர்.

அதன் போது காரினுள் இருந்து 04 கிலோ தங்கத்தை மீட்டுள்ளனர். அதனை அடுத்து காரில் பயணித்த இரு பெண்கள் மற்றும் கார் சாரதி ஆகிய மூவரையும் கைது செய்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நகர் பகுதிக்கு தங்கத்தை எடுத்து சென்ற வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content