ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய துருக்கி வழியே ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் : ஒருவர் பலி!

  • April 29, 2024
  • 0 Comments

துருக்கியில் டிங்கி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். படகில் இருந்து எஞ்சி 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியான ஃபிரான்டெக்ஸின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதேவேளை இன்று (29.04) அதிகாலை 10 பேர் கரையோர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அவர்களும் குறித்த டிங்கி படகில் இருந்தவர்களா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியை தளமாகக் […]

இலங்கை

யாழில் வேலை வாய்ப்பு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள்

  • April 29, 2024
  • 0 Comments

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (29) காலை இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் வேண்டும் வேலை வேலை வேண்டும், நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோகங்களை எழுப்பியிருத்தனர். மேலும் பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் […]

இலங்கை

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை பொருள்! சுற்றி வளைத்த பொலிஸார்!!

  • April 29, 2024
  • 0 Comments

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட Hash மற்றும் Kush கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்களுடன் Software Engineer ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் […]

பொழுதுபோக்கு

கூலி டீசர்.. ரஜினியை கலாய்த்தாரா வெங்கட் பிரபு? அவரே கொடுத்த விளக்கம்

  • April 29, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் அப்பட பணிகள் துவங்க உள்ளது, அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் திரைப்படங்களின் சில வசனங்களும் அதில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் ஒரு சர்ச்சையான வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் இப்பொழுது வரும் […]

ஆசியா

அடுத்தடுத்த அதிர்வுகளால் சீனா, மியான்மர் மக்களை மிரட்டிய நிலநடுக்கம்

  • April 29, 2024
  • 0 Comments

சீனா மற்றும் மியான்மர் நாடுகளில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்தனர். சீனாவின் ஜிஜாங் நகரில் நேற்று இரவு 9.25 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆட்சி பகுதிக்குட்பட்ட திபெத்தில் ஷிகாத்சே என்ற இடத்தில் இருந்து 146 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் […]

இலங்கை

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய வழக்கு ; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

  • April 29, 2024
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது. நெதர்லாந்து அரசு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

  • April 29, 2024
  • 0 Comments

இலங்கையில் சாதாரணத் தர பரீட்சை மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை காலப்பகுதியில், பாடங்கள் தொடர்பான குறிப்புக்கள்,பாட விரிவுரை, வகுப்புகள் நடத்துதல் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை தொடர்பான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், கையேடுகள் வழங்குதல் மற்றும் […]

செய்தி மத்திய கிழக்கு

காஸாவில் தொடரும் போர் – சவுதி அரேபியா விடுத்த எச்சரிக்கை

  • April 29, 2024
  • 0 Comments

காஸாவில் தொடரும் போரால் அனைத்துலகப் பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு உலகப் பொருளியல் கருத்தரங்கைத் தொடங்கிவைத்து சவுதி அரேபியா அந்தக் கருத்துகளை முன்வைத்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன், பாலஸ்தீன வட்டாரத் தலைவர்கள், சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்ட முயற்சி செய்யும் பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் முதலானோர் மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர். இரண்டு நாள்கள் இடம்பெறும் கூட்டங்களில் காஸாவிலும் உக்ரேனிலும் நிலவும் போர்களைப் பற்றிக் கலந்துரையாடப்படும். மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று இஸ்ரேல் […]

வாழ்வியல்

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றம்!

  • April 29, 2024
  • 0 Comments

சர்க்கரை என்ற ஒன்று இப்போது எல்லா பொருட்களிலுமே கலக்கப்படுகிறது. ஆனால் இதை அதிக அளவில் சாப்பிடுவதால் பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக விரைவாக வயதான தோற்றம் வந்துவிடும் என்கின்றனர். அதிகப்படியான சர்க்கரையால் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை சாப்பிடுவது என்றதும் நேரடியாக சர்க்கரையை அப்படியே சாப்பிடுவது என நினைக்க வேண்டாம். சர்க்கரை கலக்கப்பட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் அது சர்க்கரையை சாப்பிடுவதற்கு சமமே. சர்க்கரையில் அதிக கலோரி […]

செய்தி

இலங்கையில் அதிர்ச்சி – குடும்ப தகராறு காரணமாக குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்

  • April 29, 2024
  • 0 Comments

இலங்கையில் குடும்ப தகராறு காரணமாக தாயினால் ஒன்பது மாத குழந்தை ஒன்று கிணற்றில் வீசப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின. தாய் மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக குழந்தை தாயினால் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி கொல்லப்பட்டிருக்கலாம் என […]