உலகம்

MH370 விமானம் மாயமானமைக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்புள்ளதா? பரபரப்பை கிளப்பிய தகவல்!

  • April 28, 2024
  • 0 Comments

இணையம் , யூடியூப் என எந்த சமூக வலைத்தளப் பக்கத்திலும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்த பல கேள்விகள், சந்தேகங்கள் குறித்த பல்வேறு தகவல்களை படித்திருப்போம். அந்தவகையில் x இல் பயனர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்திற்கு அருகில் ஒரு மர்மமான பொருள் பறந்து வருவதாகக் கூறி காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆஷ்டன் ஃபோர்ப்ஸ் என்ற X பயனர் காணொலியை பகிர்ந்து இந்த விஷயம் விமானத்திற்கு மிக அருகில் பறக்கிறது, அது ஒரு செயல்பாட்டைக் […]

இலங்கை

EPF வட்டி விகிதத்தை உயர்த்திய இலங்கை அரசாங்கம்: வெளியான அறிவிப்பு

ஊழியர்களுக்கு பயனளிக்கும் நோக்கில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதத்தை தற்போதைய 9% லிருந்து 13% ஆக உயர்த்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முழுவதும் EPFக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதத்தை செலுத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதிப்படுத்தினார்.

பொழுதுபோக்கு

பெட்டி படுக்கையுடன் சன் டிவிக்கு கிளம்பினார் வெங்கடேஷ் பட்… TRB யில் நடக்கப்போவது என்ன?

  • April 28, 2024
  • 0 Comments

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி சீசன் 5 நேற்றைய தினம் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, விடிவி கணேஷ், தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களம் இறங்கி இருக்கிறார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என வெங்கடேஷ் பட் முன்னதாகவே ஒரு பதிவு போட்டிருந்தார். இதற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு நடக்கும் கொடுமை : அவசர நிலையை அறிவிக்கக் கோரி ஒன்றுதிரண்ட மக்கள்!

  • April 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில், இந்த ஆண்டு இதுவரை சராசரியாக நான்கு நாட்களுக்கு ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில்  அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுக்கூடி பேரணிகளை நடத்தியுள்ளனர். தலைநகர் கான்பராவில் கூடிய எதிர்பாளர்கள் பாலின அடிப்படையிலான வன்முறை தேசிய அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அதைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை தேசிய அவசரநிலையாக வகைப்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் அழைப்புகளுக்கு பதிலளித்த […]

ஐரோப்பா

எல்லைப் படை அதிகாரிகளின் திடீர் முடிவு: ஸ்தம்பிதமடையப்போகும் பிரித்தானிய ஹீத்ரோ விமான நிலையம்

பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோவில் உள்ள எல்லைப் படை ஊழியர்கள், தங்களது பணி நிலைமைகளில் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 2, 3, 4 மற்றும் 5 ஆகிய டெர்மினல்களில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திங்கள்கிழமை அதிகாலை வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று பொது மற்றும் வணிகச் சேவைகள் (PCS) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தொழிலாளர்கள் சில திட்டங்களுக்கு எதிராக மே 7 முதல் மே 13 வரை ஹீத்ரோவில் […]

மத்திய கிழக்கு

லெபனான் -இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதல் : பிரஞ்சு வெளியுறவு மந்திரி லெபனான் விஜயம்!

  • April 28, 2024
  • 0 Comments

லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நிலவும் மோதலை தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Stéphane Séjourné  லெபனானுக்கு விஜயம் செய்துள்ளார். அவர் தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளையும், லெபனானின் பாராளுமன்ற சபாநாயகர், இராணுவத் தலைவர், வெளியுறவு அமைச்சர் மற்றும் காபந்து பிரதமர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனாலில் உள்ள போராளிக்குழுவான ஹிஸ்புல்லா ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக எல்லைப் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றது.  இஸ்ரேலிய தாக்குதலில் […]

மத்திய கிழக்கு

துபாயில் 10 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 28, 2024
  • 0 Comments

துபாய் நகர விமான நிலையம் நகர மாநிலத்தின் இரண்டாவது இடத்திற்கு மாற்றுவதற்கான நகர்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இதற்கான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக 35 பில்லியன் செலவிடவுள்ளதாகவும் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு ஏற்பட்ட வருமான இழப்பை சீர்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமுற்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த  நீண்டகாலமாக  திட்டமிடப்பட்டாலும், 2009 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கைவிடப்பட்டது. “எதிர்கால […]

இலங்கை

தென்கொரியாவிற்கு இடம்பெயரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி?

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளை முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வன்மையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். எந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

மேற்குல நாடுகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் : ரஷ்யா கடும் மிரட்டல்

உறைந்த ரஷ்ய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டால் “கடுமையான” பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா மேற்கு நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு ஈடாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷ்யா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார். “எங்கள் தாய்நாடு விற்பனைக்கு இல்லை” என்றும் ஜாகரோவா வலியுறுத்தியுள்ளார். “ஒரு ரஷ்ய சொத்துக்கள் தீண்டப்படாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் மேற்கத்திய திருட்டுக்கு கடுமையான பதில் இருக்கும். மேற்கு நாடுகளில் […]

ஆஸ்திரேலியா

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி – ஆஸ்திரேலியா அறிவிப்பு

  • April 28, 2024
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளை கடந்த பிறகும் தொடர்ந்து நடந்து வருகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குத் தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்குச் சென்ற அவர்,உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு […]