வட அமெரிக்கா

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட அமெரிக்கர் உயிரிழப்பு !

  • May 12, 2024
  • 0 Comments

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் மசாச்சுசெட்ஸ் பொது மருத்துவமனையில், 62 வயதான ரிக் ஸ்லேமேன் என்பவருக்கு சிறுநீரகம் மிக மோசமாக பாதிப்படைந்ந்தால், உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. ஒரு உயிரினத்தின் இறுப்புகள் அல்லது திசுக்களை வேறொறு உயிரினத்திற்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தும் வேறு இன உறுப்பு முறையில் இந்த சாதனை ஒரு மைக்கல்லாக பார்க்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து 2 மாதங்களில் ஸ்லேமேன் உயிரிழந்துள்ளார். […]

இந்தியா

இந்தியா: விமான நிலையம் உட்பட இரண்டு டெல்லி மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் தொடர்ந்து விமான நிலையத்துக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள 200 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய தலைநகரில் உள்ள இரண்டு பெரிய மருத்துவமனைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதன்முதலில் புராரி மருத்துவமனை பிற்பகல் 3.15 […]

இலங்கை

இலங்கை மக்கள் மத்தியில் அமைதியின்மை – மஹிந்த கூறும் காரணம்!

  • May 12, 2024
  • 0 Comments

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் செலவீனங்களைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அரச சொத்துக்களை அவசர அவசரமாக விற்பதன் […]

மத்திய கிழக்கு

காஸாவில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்

  • May 12, 2024
  • 0 Comments

காஸாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் வேளையில் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.உதவிப் பொருள்களை வழங்கும் குழுக்கள், பங்காளி நாடுகள் ஆகியவை விடுத்த எச்சரிக்கைகளையும் தாண்டி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தஞ்சம் புகுந்துகொள்ள ராஃபாதான் எஞ்சியிருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்தும் வெளியேறவேண்டிய சூழல் நிலவுகிறது. சனிக்கிழமை (மே 11) மாலை வட காஸாவின் சில பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]

இலங்கை

சூடுப்பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு செயற்குழு ஏகமனதாக வாக்களித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று காலை கோட்டேயில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்த நியமனம் செல்லுபடியாகாது என கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான அணியினர் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளரான சரத் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திஸாநாயக்க, இந்தச் சந்திப்புக்கு […]

உலகம்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 12, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் கடற்கரைக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

உலகம்

அமெரிக்காவில் ரோந்து நடவடிக்கைக்கு சொகுசு காரை பயன்படுத்தும் பொலிஸார்!

  • May 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் பொலிஸ் அதிகாரிகள் பிரபலமான ரோல்ஸ் ரோய்ஸ் காரை ரோந்து நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. $250,000 டொலர் மதிப்புள்ள இந்த கார் சொகுசு வியாபாரி பிரமன் மோட்டார்ஸிடம் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கொள்வனவு செய்துள்ளனர். MBPD ஆட்சேர்ப்புக் குழுவிற்கு இந்த அற்புதமான சேர்ப்பை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மியாமி காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ரோந்து காரின் அசாதாரண தேர்வு இணைய பயனர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது கடந்த 2012 ஆம் […]

பொழுதுபோக்கு

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை சம்பவ இடத்திலேயே பலி

  • May 12, 2024
  • 0 Comments

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 35. ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர், ஷெரிப்பள்ளி கிராம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியது. அப்போது,​​ஹைதராபாத்தில் இருந்து வனபர்த்தி நோக்கி வந்த பேருந்து, காரின் வலது பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் நொறுங்கியது. இதில் […]

உலகம்

பெலாரஸில் இருந்து சட்டவிரோத குடியேற்றம்! போலந்து பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

பெலாரஸில் இருந்து சட்டவிரோத குடியேற்றத்தில் வளர்ந்து வரும் “கலப்பினப் போரை” நாடு எதிர்கொண்டுள்ளதால், முழு கிழக்கு எல்லையையும் மேலும் வலுப்படுத்தும் பணியை போலந்து தொடங்குகிறது என்று பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். டஸ்க் திட்டமிட்ட செயல்கள் பற்றிய விவரங்களையோ அல்லது ஒதுக்கப்படும் நிதியையோ குறிப்பிடவில்லை ஆனால் போலந்தின் பாதுகாப்புக்கு வரும்போது “வரம்புகள் இல்லை” என்று கூறியுள்ளார். “சட்டவிரோத குடியேற்றத்தின் அழுத்தம் காரணமாக போலந்து-பெலாரஷ்யன் எல்லை ஒரு தனித்துவமான இடமாகும். உண்மையில், நாங்கள் முன்னேறி வரும் கலப்பினப் போரைக் […]

பொழுதுபோக்கு

சன் டிவி இறக்கிய 9 தரமான போட்டியாளர்கள்.. அந்த நடிகையால் சூடு பிடிக்கும் நிகழ்ச்சி

  • May 12, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் டீம் சன் டிவிக்கு சென்று, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தரமான போட்டியை ஆரம்பித்தது சன் டிவி. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜன் களமிறங்கி இருக்கிறார். மேலும் தொகுப்பாளர்களாக ரக்சன் மற்றும் மணிமேகலை உள்ளனர். போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, […]