இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படும் என்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் […]













