செய்தி

இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படும் என்றும், விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

அரசாங்க பாடசாலைகள் அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் வகுப்பில் கற்கும் மாணவர்கள் மாத்திரமே புலமைப்பரிசில் பரீட்சையில் பங்கேற்க முடியும் என்பதோடு, 31 ஜனவரி 2025 அன்று 11 வயதுக்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் மட்டுமே உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆகும்.

onlineexams.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் சிக்கல்கள் இருப்பின், பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 அல்லது 011-2 784537, 0112 786616, 0112 784208 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த ஆண்டு, 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content