இலங்கை செய்தி

கொழும்பு உட்பட இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 8 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 18 மாவட்டங்களில் இன்று முதல் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

முடியுமானவரை சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை