போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒருவர் பலி!
வடக்கு காசாவில் Jabalia பகுதியில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
போரினால் சிதைந்த தமது வீட்டின் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போரினால் ஏற்கனவே முற்றிலும் அழிந்துபோன ஒரு பகுதியிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கின்றது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.
போர் நிறுத்தத்தைமீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.




