புதிய பேச்சுவார்த்தைக்கு முன் போர் நிறுத்த மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் – ஈரான்!
“எந்தவொரு புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கும் முன்பு, அமெரிக்கா தனது ‘போர் நிறுத்த மீறலை’ நிறுத்த வேண்டும்,” என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரானுக்கான ஐ.நா தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid Iravani) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“அவர்கள் முற்றுகையை நீக்கியவுடன், அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் நடைபெறும்,” என்று கூறிய அவர், ஈரான் எந்தவொரு சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கியவர்கள் அல்ல. அவர்கள் ஒரு அரசியல் தீர்வைத் தேடினால், நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அவர்கள் போரைத் தேடினால், அதற்கும் ஈரான் தயாராக உள்ளது,” என்று கூறியுள்ளார்.





