உலகம்

ஓமானுக்கு வடகிழக்கே பயணித்த கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்!

ஓமானுக்கு வடகிழக்கே 15 கடல் மைல் (28 கி.மீ) தொலைவில் பயணித்த கொள்கலன் கப்பல் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பு இது தொடர்பில் தெரிவித்துள்ளது.

UKMTO வெளியிட்ட அறிவிப்பில், ஐ.ஆர்.ஜி.சி-யின் (IRGC) துப்பாக்கிப் படகு ஒன்று கொள்கலன் கப்பலை நெருங்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், “கப்பலின் பாலத்திற்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தீ விபத்துகளோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கப்பலில் பயணித்த அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/UK_MTO/status/2046813177220895098?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2046813177220895098%7Ctwgr%5E7a354f94fd9692f224e50d16bf5901b69c3862d4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aljazeera.com%2Fnews%2Fliveblog%2F2026%2F4%2F22%2Firan-war-live-trump-says-ceasefire-extended-as-talks-with-tehran-in-limbo

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்