ஐரோப்பா

முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை உருவாக்கி வரும் ரஷ்யா!

  • April 25, 2026
  • 0 Comments

ரஷ்ய விஞ்ஞானிகள் முதுமையைத் தாமதப்படுத்தும் ‘உலகின் முதல் மருந்தை’ உருவாக்கி வருவதாகத் தெரியவந்துள்ளது. AI தொழில்நுட்ப மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மனிதர்கள் 150 வயதை  எட்டுவது அநேகமாக சாத்தியம் எனக் கூறிய சில மாதங்களுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேம்பாட்டுப் பணியை முதுமை மற்றும் மருத்துவ உயிரியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சர் டெனிஸ் செகிரின்ஸ்கி […]

உலகம்

சமூக ஊடகத் தடை – நோர்வேயில் புதிய சட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்த சமீபத்திய நாடாக நார்வே மாறியுள்ளது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளிியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store),  குழந்தைகள் குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைப் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் […]

உலகம் செய்தி

கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது […]

விளையாட்டு

உறவை கசப்பாக்கிய அந்தவொரு சம்பவம் – 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தார் ஸ்ரீசாந்த்!

  • April 25, 2026
  • 0 Comments

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தன்னைத் தாக்கியதற்காக ஹர்பஜன் சிங்கை மன்னிப்பதாகவும், ஆனால் அந்தத் தாக்குதலை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 2008 ஐபிஎல் தொடரில் நடந்த அந்தச் சம்பவத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தபோது அவர் இவ்வாறு கூறினார். அந்தத் தொடரில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் உலகப் புகழ்பெற்ற ஒரு கசப்பான நினைவாக மாறியிருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் நண்பர்களான போதிலும், சமீபத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு […]

ஐரோப்பா செய்தி

அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்

  • April 25, 2026
  • 0 Comments

போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன. இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார். இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் பெரும் தாக்குதல் – ருமேனியாவிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரிட்டிஷ் போர் விமானங்கள்

  • April 25, 2026
  • 0 Comments

ருமேனியா (Romania) வான்பரப்பில் போர் விமானங்கள் கண்காணிப்பு பணியில் இருந்த நிலையில், ரஷ்யா (Russia) உக்ரைன் (Ukraine) மீது நேற்றிரவு மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மொத்தம் 619 ஆளில்லா விமானங்களையும் 47 ஏவுகணைகளையும் ஏவியதாக, உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது. இவற்றில் 580 ஆளில்லா விமானங்களும் 30 ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனின் அரசு அவசரகால […]

இந்தியா

மயோனைஸ் மீதான தடை அதிரடியாக நீடிப்பு

  • April 25, 2026
  • 0 Comments

உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கன் போன்ற உணவுகளுடன் வழங்கப்படும் ‘மயோனைஸ்’ (Mayonnaise) மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பச்சை முட்டையிலிருந்து (Raw Egg) தயாரிக்கப்படும் மயோனைஸ் எளிதில் பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விதியை மீறி மயோனைஸ் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் சிறுவர்கள் உயிரிழந்த சோகம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • April 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேசன் தெரு (Mason Street) பகுதியில் நேற்றிரவு இரவு உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் (West Midlands Police), தீயணைப்பு சேவை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் […]

செய்தி

ஈரானில் 57 ஆவது நாளாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் தற்போது எட்டு வாரங்களைக் கடந்து நீடிக்கிறது. 57 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.