உலகம் செய்தி

ரஷ்யாவின் பெரும் தாக்குதல் – ருமேனியாவிலிருந்து அவசரமாக புறப்பட்ட பிரிட்டிஷ் போர் விமானங்கள்

ருமேனியா (Romania) வான்பரப்பில் போர் விமானங்கள் கண்காணிப்பு பணியில் இருந்த நிலையில், ரஷ்யா (Russia) உக்ரைன் (Ukraine) மீது நேற்றிரவு மிகப்பெரிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா மொத்தம் 619 ஆளில்லா விமானங்களையும் 47 ஏவுகணைகளையும் ஏவியதாக, உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.

இவற்றில் 580 ஆளில்லா விமானங்களும் 30 ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் அரசு அவசரகால சேவையின் தகவலின்படி, ட்னிப்ரோ (Dnipro) நகரில் நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ருமேனியா (Romania) வான்பரப்பிற்கு அருகே ஆளில்லா விமானங்கள் நுழைந்ததை ரேடார் அமைப்புகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு தளத்திலிருந்து இரண்டு பிரிட்டிஷ் போர் விமானங்கள் அவசரமாக புறப்பட்டதாக ருமேனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!