சமூக ஊடகத் தடை – நோர்வேயில் புதிய சட்டம்!
குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை அறிவித்த சமீபத்திய நாடாக நார்வே மாறியுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைத்தளங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் பொறுப்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளிியிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் (Jonas Gahr Store), குழந்தைகள் குழந்தைகளாக இருக்கக்கூடிய ஒரு குழந்தைப் பருவத்தை நாங்கள் விரும்புவதால், இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
விளையாட்டு, நட்பு மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகியவை அல்காரிதம்களாலும் திரைகளாலும் ஆக்கிரமிக்கப்படக்கூடாது,’ என்று கூறியுள்ளார்.
குழந்தைகளின் டிஜிட்டல் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை இது,’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





