இங்கிலாந்தில் சிறுவர்கள் உயிரிழந்த சோகம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
இங்கிலாந்தில் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) நகரில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேசன் தெரு (Mason Street) பகுதியில் நேற்றிரவு இரவு உள்ள ஒரு வீட்டில் தீ ஏற்பட்டதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் (West Midlands Police), தீயணைப்பு சேவை மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு குழந்தைகளை மீட்ட போதிலும் காப்பாற்ற முடியாமல், சம்பவ இடத்திலேயே சிறுவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவசர சேவைகள் வருவதற்கு முன்பே, வீட்டில் இருந்த மற்ற இரண்டு குழந்தைகளும் ஒரு பெண்ணும் வெளியேறியிருந்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்தனர், ஆனால் மருத்துவமனை சிகிச்சை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.





