விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்த இளம் வீரர்: பறிபோனது வெற்றி!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த […]

உலகம் செய்தி

வோஷிங்டனில் பதற்றம்: டொனால்ட் ட்ரம்ப் அவசரமாக வெளியேற்றம்

  • April 26, 2026
  • 0 Comments

வொஷிங்டனில் உள்ள ‘ ஹில்டன்’ ஹோட்டலில் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹில்டன் விருந்தகத்தின் மண்டபத்திற்குள் “பெரிய சத்தம்” சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர். […]

இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

ஐரோப்பா

அமெரிக்கா – பிரிட்டன் உறவில் விரிசல் : ட்ரம்ப்பை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் மன்னர்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விழாவில் கலந்துகொள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், பல முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ​​ஈரான் போர் மற்றும் நேட்டோவுடனான விரிசல் அடைந்த உறவுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்-அமெரிக்க உறவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விஜயம் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, ​​மன்னர் சார்லஸ் ட்ரம்பை தனிப்பட்ட முறையில் […]

உலகம்

அமைதி பேச்சுவார்த்தையை புறக்கணிக்கிறாரா ட்ரம்ப்? தூதுவர்களுக்கு உத்தரவு!

  • April 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களைத் தீர்ப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff ) மற்றும் ஜாரெட் குஷ்னருக்கு (Jared Kushner) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக அவர்கள் இன்று (25) பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி தனது பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். எந்தவொரு விவாதத்தையும் […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தைக் கடந்தது

  • April 25, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8,40,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 8,40,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாவர். இதன்படி, வருகை தந்த இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை 1,76,465 ஆகும். பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அதிகளவான […]

இலங்கை செய்தி

அடுத்த மாதம் முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகள்

  • April 25, 2026
  • 0 Comments

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டைகளை பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் இலகுவான, காகிதமற்ற மற்றும் வினைத்திறனான அனுபவத்தை உறுதி செய்யும் நோக்கில், வாகன காப்புறுதி […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் இரவு விருந்தில் ட்ரம்ப் பங்கேற்பு – ஊடக சுதந்திரம் குறித்து மீண்டும் விவாதம்

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வெள்ளை மாளிகையில் நடைபெறும் பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். 1921 முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்வு, பத்திரிகையாளர்களும் ஜனாதிபதியும் ஒன்றாக கலந்துகொள்ளும் ஒரு பாரம்பரிய விருந்தாகும். ஆனால், இது பல ஆண்டுகளாக ஊடக சுதந்திரம் மற்றும் அரசியல் உறவுகள் குறித்து சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. டிரம்ப் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலும் ஊடகங்களை விமர்சித்து வந்தவர். இதற்கு முன்பு இந்த இரவு விருந்தில் அவர் […]

ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை : பிரித்தானியாவிற்கு உள்ள சவால்!

  • April 25, 2026
  • 0 Comments

தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துவது தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood ) தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் திட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தலிபான் நிர்வாகத்தை அரசாங்கம் அங்கீகரிக்காத நிலையில் இந்த நடவடிக்கை சவாலாக இருப்பதாக தெரிவித்த அவர், இது சாத்தியப்படும் பட்சத்தில்  குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தை  ஏற்படுத்தும் என்றும்  தெரிவித்தார். சிறிய படகுகள் மூலம் […]

இலங்கை செய்தி

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகம் – 10 இலட்சம் ரூபா அபராதம்

  • April 25, 2026
  • 0 Comments

குடிநீர் போத்தலை அதன் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, ஹப்புத்தளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹப்புத்தளை, வெலிமடை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான உணவகம் ஒன்றிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, அங்கீகரிக்கப்பட்ட […]