அரசியல் இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர்கள்மீது தொடர் தாக்குதல்: அதிர்ந்தது நாடாளுமன்றம்!

  • May 7, 2026
  • 0 Comments

  ” மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோட்ட அதிகாரியா, தொழிலாளியா என்பது முக்கியமல்ல. சட்டமென்பது அனைவருக்கும் சமம்.” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று (07) திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தில் தோட்ட தொழிலாளி […]

உலகம்

தென்கொரியாவின் முன்னாள்  பிரதமர் ஹான் டக்-சூவின் தண்டனைக்காலம் குறைப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள்  பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது. யூன் சுக் இயோல் ஆட்சி காலத்தில்   இராணுவ சட்டத்தை தவறாக பிரயோகித்தபோது அவருக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் ஹானுக்கு 23 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது 15 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதில் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவின் (Han Duck-soo ) பங்கு தொடர்பாக, தென் கொரிய மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. யூன் […]

உலகம்

அப்பாஸ் அராக்சியை தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த அமெரிக்க குழு!

  • May 7, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் சீனப் பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்க செனட் சபை  பிரதிநிதிகள் குழு ஒன்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் (Wang Yi ) இன்று சந்தித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்தப் பயணம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை தாங்கும் குடியரசுக் கட்சி செனட்டர் ஸ்டீவ் டைன்ஸ், பெய்ஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் “ஸ்திரத்தன்மை […]

இலங்கை

மத்தியக்கிழக்கில் நிலவும் மோதல் போக்கு தொடர்பில் இலங்கை கரிசனை!

  • May 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு மற்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில்  வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், இலங்கை சமூகம் உட்பட, இப்பிராந்தியத்தில் கணிசமான சர்வதேச புலம்பெயர் சமூகம் உள்ளது என்றும், அவர்களின் பாதுகாப்பும் நல்வாழ்வும் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு, குடிமை உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய எரிவாயு விநியோகச் சங்கிலிகளின் […]

உலகம் செய்தி

இந்தோ,பசிபிக் பாதுகாப்பு: பிரதமர் மோடி வழங்கியுள்ள உறுதிமொழி!

  • May 7, 2026
  • 0 Comments

இந்தோ, பசிபிக் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பவற்றில் இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து […]

அரசியல் இலங்கை செய்தி

‘குற்றப் பிரேரணை’:தயாசிறி எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார். வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துகளுக்காகவே இந்நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ” ஜனாதிபதி தனது விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்குமாறு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார். இத்தகைய நடவடிக்கை நீதிபதிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்கள் தங்கள் பிழைப்புக்காக தீர்ப்புகளை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள். அதன்படி, இது நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு தெளிவான […]

செய்தி விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு விளையாட்டுக்கான தடை நீடிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடையை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு நீடித்துள்ளது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சால் நேற்று விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட தொடர்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் இந்தியா பங்கேற்காது.’ எனக் கூறப்பட்டுள்ளது. […]

செய்தி பொழுதுபோக்கு

ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு…!

  • May 7, 2026
  • 0 Comments

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகின்றது. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அண்மையில் அங்கு சென்ற அவர், செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]

செய்தி விளையாட்டு

ஆர்.சி.பியை வீழ்த்துமா லக்னோ?

  • May 7, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் Lucknow Super Giants , Royal Challengers Bengaluru ஆகிய அணிகள் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான RCB அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் […]

அரசியல் இலங்கை செய்தி

ஈழத் தமிழர்களின் குரலாக ஒலிப்பாரா விஜய்?

  • May 7, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சந்திரசேகர் ஜோசப் விஜய்க்கு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து, மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கும் உங்களுக்கு ஈழத் […]