இலங்கை செய்தி

“போதைப்பொருள் ஒழிப்பு” – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் […]

இலங்கை செய்தி

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

  • May 7, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவௌ 10ம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை

தெனியாய கல்வி வளையத்தில் 04 பாடசாலைகளை மூட நடவடிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

மாணவர்களிடையே வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் காரணமாக, தெனியாய கல்வி மண்டலத்தில் உள்ள நான்கு பாடசாலைகள் நாளை (08) மூடப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெனியாய மண்டல கல்விப் பணிப்பாளர் நிஷாக ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழிக் கல்லூரி மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகியவை மூடப்படும். சம்பந்தப்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் […]

ஐரோப்பா

வைரஸ் தாக்கம் : சுய தனிமைப்படுத்தலுக்கு அழைப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலில் பயணித்த பிரித்தானிய பயணிகள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பல் தற்போது டெனரிஃப் தீவிற்கு பயணித்துள்ளது. இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையின் (UKHSA) தலைமை அறிவியல் அதிகாரியான பேராசிரியர் ராபின் மே ( Robin May) “இந்த சொகுசுக் கப்பலில் நேரடியாகத் தொடர்பில்லாத பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவு எனத் தெரிவித்துள்ளார். ஹன்டா வைரஸின் “மிகவும் தீவிரமான நிலை காரணமாக மக்கள் தங்களை எட்டு வாரங்கள் வரை” […]

உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – தீயில் சிக்கி பலர் பலி!

  • May 7, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டிரான்ஸ்-சுமத்ரா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமத்ராவில் உள்ள லுபுக்லிங்காவிலிருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜாம்பிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எறிந்தமையால் பெரும்பாலான பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 7, 2026
  • 0 Comments

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார். இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளுக்கு முடிவு கட்டியது இஸ்ரேல்!

  • May 7, 2026
  • 0 Comments

லெபனான், பெய்ரூட் நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டப் பிரிவான ரத்வான் Radwan பிரிவின் தலைவர் அகமது பலுத் உள்ளிட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. வான்வழிப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளும் இஸ்ரேலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகம்

சீனாவுடனான பதற்றம் : நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோவை சோதனை செய்த தைவான்!

  • May 7, 2026
  • 0 Comments

தைவான் உள்நாட்டில் தயாரித்துள்ள  நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோ (torpedo) சோதனை ஏவுதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது, சீனக் கடற்படைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ஒருவேளை மோதல் ஏற்பட்டால், முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் இன்றியமையாதது. சீனா நீண்டகாலமாக  தைவானை உரிமைக்கோரி வருகின்றது. அவ்வவ்போது இருநாடுகளுக்கும் இடையில்  எல்லை மீறல் சண்டைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்க தைவான் முனைப்பு காட்டி வருகிறது. […]

உலகம் செய்தி

பிரான்ஸ் விமான நிறுவனங்களுக்கு சலுகை!

  • May 7, 2026
  • 0 Comments

விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் அரசாங்கம் தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து சேவையைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனைச் சமாளிக்க வரிச் சலுகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டணங்களைச் செலுத்துவதில் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் முன்வந்துள்ளார். ஐரோப்பா தனது எரிபொருள் தேவைக்கு அதிகளவில் மத்திய கிழக்கையே நம்பியிருப்பதால், இந்தச் சூழல் ஒரு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய பெண்கள்மீது பயங்கரவாத விசாரணை!

  • May 7, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இன்று ஆஸ்திரேலியாவை வந்தடைந்தனர். ஒரு குழுவினர் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 5:30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்திலும், மற்றொரு பெண்ணும் குழந்தையும் அடுத்த 15 நிமிடங்களில் சிட்னியிலும் தரையிறங்கினர். இவர்கள் அரசியல் வட்டாரங்களில் ‘ஐ.எஸ். மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். 2019-இல் ஐ.எஸ். அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் உள்ள அல்-ரோஜ் […]