உலகம்

பரம எதிரியை சந்திக்கும் ட்ரம்ப் : தைவான் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சீனாவிற்கு பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தன்போது  தைவான் விவகாரத்தில் சீனா சில “தந்திரமான நகர்வுகளை” செய்ய முயற்சிக்கக்கூடும் என்று தைவானின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ஒருவர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தைபேயில் உள்ள நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்புப் பணியகத்தின் தலைமை இயக்குநர் சாய் மிங்-யென் (Tsai Ming-yen ), ட்ரம்ப் மற்றும்  ஷி இடையேயான உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம், “அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இல்லாமல்”, அவர்களின் […]

இந்தியா முக்கிய செய்திகள்

விஜய்க்கு வந்த சிக்கல் : தி.மு.க, அ.தி.மு.க கைக்கோர்க்குமா? ஆளுநர் பதில்!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டசபை உருவாகியுள்ள நிலையில், ஆட்சியமைக்க த.வெ.க போராடி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் , காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளதால்  தற்போது 113 இடங்களை தம்வசம் வைத்துள்ளது. இந்நிலையில் ஆட்சியமைக்க மேலும் 05 இடங்கள் தேவைப்படுவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்த சூழலில், தி.மு.கவும், அ.தி.மு.கவும் இணைந்து ஆட்சியமைக்க முடியுமா என ஆங்கில ஊடகம் ஒன்று ஆளுநர் அர்லேகரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த ஆளுநர் அதுவும் சாத்தியமே எனக் கூறியதுடன், இன்னும் […]

ஐரோப்பா

சீனாவிற்காக உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை நோட்டமிட்ட பொலிஸ் அதிகாரி கைது!

  • May 7, 2026
  • 0 Comments

சீனாவிற்காக உளவு பார்த்த இருவரை பிரித்தானிய நீதிமன்றம்  குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. சீன-பிரிட்டிஷ் இரட்டைக் குடியுரிமை பெற்ற பீட்டர் வாய் (38) மற்றும் பில் யுவன் (65) ஆகிய இருவரும், ஓல்ட் பெய்லியில் இன்று  நடந்த விசாரணையைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஹொங்காங் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நபர்களைக் கண்டறிய உள்துறை அமைச்சகத்தின் கணினி அமைப்பை  நோட்டமிட்டதற்காகவும், பொது அலுவலகத்தில் முறைகேடாக நடந்துகொண்டதற்காகவும் பீட்டர் வாய் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

நேட்டோ நாட்டின் மீது ஆளில்லா விமான தாக்குதல்!

  • May 7, 2026
  • 0 Comments

நேட்டோ உறுப்பு நாடான லாட்வியாவிற்குள் இன்று இரண்டு ஆளில்லா விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த ஆளில்லா விமானங்கள் “ரஷ்யாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து உக்ரைனால் ஏவப்பட்டிருக்கலாம்” என்று லாட்வியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ருட்ஸ் ( Andris Spruds ) சந்தேகம் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, பன்னாட்டு நேட்டோ பால்டிக் வான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இராணுவ விமானங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய எல்லையிலிருந்து […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!

  • May 7, 2026
  • 0 Comments

“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு நற்செய்தி : இலவச விசா அணுகல்!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியா, ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து உட்பட மேலும் 40 நாடுகளுக்கு  இலவச விசா வசதியை  வழங்க இலங்கை நாடாளுமன்றம்  ஒப்புதல் அளித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால  தெரிவித்தார். தொடர்புடைய முன்மொழிவு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஸ்திரியா, பெலாரஸ், ​​பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, […]

இலங்கை

அவசரகால நிலை நீட்டிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

நாட்டின் பொது அவசரகாலநிலை  மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.  இதன்போது  ஆதரவாக 145 பேரும் எதிராக 06 பேரும் வாக்களித்தனர். இதற்கமைய 136 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.      

ஐரோப்பா

ட்ரம்பின் அவசர முடிவால் வேலையிழக்கும் மக்கள் : ஜெர்மனியில் நெருக்கடி!

  • May 7, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புக்களை திரும்பப் பெற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அந்நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு தயாராகி வருகிறது. பாதிக்கப்படும் படைப்பிரிவுகள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வில்செக்கின் ரோஸ் (Vilseck’s Rose) படைத்தளத்தில் நிலை கொண்டுள்ள துருப்புக்கள் வெளியேறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலையிழப்பு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபான விடுதிகள், உணவகங்கள், […]

ஐரோப்பா

உள்ளுராட்சி தேர்தல் : ஸ்டாமருக்கு கடும் பின்னடைவு!

  • May 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று  நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து முழுவதும் சுமார் 5,000 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும், ஒரு சில மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பகுதிளில் தன்னாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது. காலை 07 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவடையவுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டு […]

செய்தி

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை , பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியே உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் […]