‘குற்றப் பிரேரணை’:தயாசிறி எம்.பி. விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குற்றப் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.
வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தெரிவித்த கருத்துகளுக்காகவே இந்நிலை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
” ஜனாதிபதி தனது விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்குமாறு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறார்.
இத்தகைய நடவடிக்கை நீதிபதிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. அவர்கள் தங்கள் பிழைப்புக்காக தீர்ப்புகளை வழங்க நிர்பந்திக்கப்படுவார்கள்.
அதன்படி, இது நீதித்துறையில் தலையிடுவதற்கான ஒரு தெளிவான நிகழ்வாகும்.
எனவே, ஜனாதிபதி குற்றப் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம்.” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.





