ஐரோப்பா செய்தி

ஃபரேஜை நம்பர் 10 க்கு கொண்டு வர தயாராகும் டோரிகள் – லிபரல் டெமாக்ரட்ஸ் குற்றச்சாட்டு

  • May 6, 2026
  • 0 Comments

கன்சர்வேடிவ் தலைவர் Kemi Badenoch மீது லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது. உள்ளூர் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கவுன்சிலர்கள் Reform UK கட்சியுடன் ஒப்பந்தங்கள் அல்லது இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என Sky News  நேர்காணலில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கன்சர்வேடிவ் கொள்கைகளை செயல்படுத்த உதவும் எவருடனும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என பதிலளித்தார். இந்த பதிலைத் தொடர்ந்து, லிபரல் டெமாக்ரட்ஸ் துணைத் தலைவர் Daisy Cooper கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானிய கடற்பரப்பில் ரஷ்ய உளவுக் கப்பல் : ஒரு மாதமாக பின்தொடரும் ரோயல் கடற்படை!

  • May 6, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கும்,  ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யாவின் முன்னணி போர்க்கப்பல்களில் ஒன்றை ரோயல் கடற்படைக் கப்பல்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வருகின்றன. அட்மிரல் கிரிகோரோவிச் என்ற போர்க்கப்பல் பிரித்தானியாவின் கடற்கரைக்கு அப்பால் பயணித்தபோது, ​​HMS டைன், HMS மெர்சி மற்றும் HMS செவர்ன் ஆகிய ரோந்துக் கப்பல்களால் கண்காணிக்கப்பட்டது. பதற்றமான இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடித்தது. கடந்த பத்தாண்டுகளில் ரோயல் நேவியால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் தீவிரமான பின்தொடர்தல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என […]

உலகம்

ஈரானில் வணிக வளாகத்தில் தீவிபத்து – 08 பேர் உயரிழப்பு!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானின் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானின் அண்டிஷே நகரில் உள்ள அர்கவான் (Arghavan) வணிக வளாகத்தில் இந்த தீவிபத்து நேர்ந்துள்ளது. கட்டிடத்தின் மீது இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய உறை காரணமாக தீ வேகமாகப் பரவியதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். அதேநேரம் தற்போது ஈரானில் இடம்பெற்று வரும் போருக்கும் இந்த தீவிபத்திற்கும் தொடர்பில்லை […]

ஐரோப்பா

ஹண்டாவைரஸ் பாதிப்பு : கப்பலை நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு!

  • May 6, 2026
  • 0 Comments

‘ஹண்டாவைரஸ்’ என்ற ஆபத்தான எலி காய்ச்சல் பரவலால் பாதிக்கப்பட்டு கடலில் தவித்து வந்த நெதர்லாந்தின் ‘எம்.வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலை கேனரி தீவில் நங்கூரமிட ஸ்பெயின் மறுப்பு தெரிவத்துள்ளது. பிராந்தியத் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ (Fernando Clavijo ) பிரதமர் பெட்ரோ சான்செஸுடன் (edro Sanchez) இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேற்படி வைரஸ் தொற்றால் பிரெஞ்சு தம்பதியர் உட்பட ஜேர்மன் நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தம்பதியினர் கப்பலில் ஏறுவதற்கு […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அமைதித் திட்டம் குறித்து அலசி ஆராய்கிறது ஈரான்!

  • May 6, 2026
  • 0 Comments

போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை ஈரான் தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது. ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் Esmail Baghaei மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி முன்மொழிவு குறித்து ஈரான் தனது கருத்துகளையும் , நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி வருகின்றது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் முன்னெடுத்துவரும் சமரச பேச்சு தற்போது வெற்றிகரமான பாதையில் பயணிப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கமைய விரைவில் இறுதி […]

உலகம் செய்தி

ஈரானுக்கான தொடர் ஆதரவை உறுதிப்படுத்தியது சீனா!

  • May 6, 2026
  • 0 Comments

சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விரும்புவதாகவும், அமெரிக்காவுடன் நியாயமான உடன்படிக்கையை எட்டத் தயாராக இருப்பதாகவும் சீனாவிடம், ஈரான் தெரியப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் சீனா செல்லவுள்ள நிலையிலேயே, ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi பீஜிங் பறந்து, முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். மே 14 ஆம் திகதி சீனா செல்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். மே 15 […]

இலங்கை செய்தி

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு குறித்து ஆராய்வு!

  • May 6, 2026
  • 0 Comments

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவைச் சந்தித்தனர். வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அரசின் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்காக […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் – நிபுணரின் விளக்கம்

  • May 6, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இரவு நேர வாக்கு எண்ணிக்கை இடம்பெறாத காரணத்தினால், எதிர்வரும் 08 ஆம் திகதி  காலை வெளியாகும் செய்திகளில் இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் என தேர்தல் ஆய்வாளர் மைக்கேல் த்ராஷர் ( Michael Thrasher) தெரிவித்துள்ளார். 2025 மே மாத கவுண்டி கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டு, முக்கிய கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் இட இழப்புகளை சந்திக்கக்கூடும் என்ற நிலை நீடிக்கிறது. 2021 மற்றும் 2022 […]

ஐரோப்பா செய்தி

செஞ்சிலுவைச் சங்க’ தொடர்பாளர் என கூறியது தவறு – பசுமைக் கட்சித் தலைவர்

  • May 6, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் என தன்னை விபரித்தது “தவறான வார்த்தைப் பயன்பாடு”  என பசுமைக் கட்சித் தலைவர் Zack Polanski ஒப்புக்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு துணைத் தலைவராக போட்டியிடும் போது நிதி திரட்டிய நிகழ்ச்சிகளில், அவர் British Red Cross அமைப்பின்  செய்தித் தொடர்பாளர் என கூறியதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த தொண்டு நிறுவனம் இந்தக் கூற்றை மறுத்தது. இதுகுறித்து BBC யின் ‘Today’ நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த […]

ஐரோப்பா செய்தி

பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட இளைஞர்கள் – முன்னாள் கவுன்சில் தலைவருக்கு 18 மாத சிறை

  • May 6, 2026
  • 0 Comments

பாலியல் ரீதியாக ஐந்து இளைஞர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில், ஸ்காட்லாந்தின் SNP கட்சியின் முன்னாள் கவுன்சில் தலைவர் ஜோர்டான் லிண்டனுக்கு (Jordan Linden) 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகிய அவர், ஏழு நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மார்ச் மாதத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. 30 வயதான லிண்டன், 14 வயதுடைய சிறுவன் உட்பட பல பதின்ம வயதினருக்கு விரும்பத்தகாத பாலியல் தகவல்கள் அனுப்பியதிலும் குற்றவாளி  என […]