செய்தி பொழுதுபோக்கு

ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு…!

கார் விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகின்றது.

சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியில் பல படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி.

இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம்.

அண்மையில் அங்கு சென்ற அவர், செவ்வாய்க்கிழமை காரில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

அதில் சிக்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவருக்கு உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் நேற்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆர்.பி.சவுத்ரியின் இறுதிச் சடங்கு கிருஷ்ணாம்பேட்டையில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறுகின்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!