உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – தீயில் சிக்கி பலர் பலி!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டிரான்ஸ்-சுமத்ரா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சுமத்ராவில் உள்ள லுபுக்லிங்காவிலிருந்து கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜாம்பிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றி எறிந்தமையால் பெரும்பாலான பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் குறைந்தது 20 பயணிகள் இருந்ததாக, உள்ளூர் பேரிடர் மேலாண்மை முகமையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில், நான்கு பயணிகள் உயிர் தப்பி, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், மற்றொருவர் சிறு காயங்களுடன் தப்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்