சீனாவுடனான பதற்றம் : நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோவை சோதனை செய்த தைவான்!
தைவான் உள்நாட்டில் தயாரித்துள்ள நீர்மூழ்கி கப்பலுக்கான முதல் டார்பிடோ (torpedo) சோதனை ஏவுதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இது, சீனக் கடற்படைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
ஒருவேளை மோதல் ஏற்பட்டால், முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் இன்றியமையாதது.
சீனா நீண்டகாலமாக தைவானை உரிமைக்கோரி வருகின்றது. அவ்வவ்போது இருநாடுகளுக்கும் இடையில் எல்லை மீறல் சண்டைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தனது இராணுவ பலத்தை அதிகரிக்க தைவான் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய அங்கமாக வகிக்கும் உள்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




