ஐரோப்பா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் – செல்வாக்கை நிலைநாட்ட முயலும் மக்ரோன்!

  • May 10, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் நேற்று தொடங்கியுள்ளார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவரது இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்ரோன் இந்த பயணத்தின்போது கென்யா மற்றும் எத்தியோப்பியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு ஆப்பிரிக்கத் தலைவர்களையும் வணிக நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் அதேவேளை பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  இந்தப் பயணத்தின் […]

உலகம்

01 பில்லியன் கச்சா எண்ணெய் இழப்பு : நிலமை சரியானாலும் மீண்டு வர நீண்டகாலம் வேண்டும்!

  • May 10, 2026
  • 0 Comments

கடந்த இரண்டு மாதங்களில் சர்வதேச சந்தைகளில் சுமார் 01 பில்லியன் கச்சா எண்ணெயை இழந்துள்ளதாக சவுதி அரம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடைபட்டதால் எரிசக்தி சந்தை கடுமையான நெருக்கடியில் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பில் இன்று சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், எண்ணெய் விநியோக வழிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட சந்தை […]

விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் நாளை பலப்பரீட்சை

  • May 10, 2026
  • 0 Comments

ஐபிஎல் 2026 தொடரின் 55 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் இரவு 7. 30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. தொடர்ச்சியான தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ள பஞ்சாப் அணிக்கு, இந்தப் போட்டி பெரும் சவாலாக அமைந்துள்ளது. மறுபுறம், புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ள அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ்அணியில்  இன்று சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் – முன்னாள் ஆதரவாளர் வலியுறுத்தல்

  • May 10, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சரும் ஸ்டார்மரின் ஆதரவாளருமான ஒருவர், பிரதமர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் மாதம் வரை அமைச்சரவை அலுவலக அமைச்சராக இருந்த ஜோஷ் சைமன்ஸ் (Josh Simons) தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். வேல்ஸில் உள்ள 40 கவுன்சில்கள் மற்றும் செனட் மீதான கட்டுப்பாட்டை தொழிற்கட்சி இழந்துள்ளது. மேலும் சுமார் 1,500 கவுன்சிலர்கள் தங்கள் இடங்களை […]

இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமனவிற்கு புதிய பொறுப்பு!

  • May 10, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சருக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் சுகாதார அமைப்பில் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் திறமையாகக் கொண்டு சேர்ப்பது, இந்தச் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் குறைப்பது மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், மாவட்ட அளவில் சுகாதார சேவைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸவின் கவனம் குவிந்துள்ளது. […]

உலகம் செய்தி

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்

  • May 10, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் தனது பதிலை பாகிஸ்தானில் உள்ள மத்தியஸ்தர்கள் மூலம் அனுப்பியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த பதிலின் விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவும் தனது திட்டத்தின் முழு விபரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், அந்த திட்டம் 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை அடிப்படையாகக் கொண்டதாகவும், இது ஈரானின் அணுசக்தி திட்டம் […]

இலங்கை செய்தி

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து – 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீக்கிரை

  • May 10, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால், 60 சதவீதத்திற்கும் அதிகமான மருந்துகள் முழுமையாகத் தீக்கிரையாகியுள்ளன. இந்தத் தீ விபத்து நேற்று இடம்பெற்ற நிலையில் அந்தப் பகுதியைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான சிறிபவானந்தராசா ஊடகங்களுக்கு இன்று இது குறித்துத் தெளிவுபடுத்தினார். தீயில் எரிந்த மருந்துகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான, பெறுமதிமிக்க மருந்துகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில் தற்போதுள்ள […]

செய்தி தமிழ்நாடு

17 ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை

  • May 10, 2026
  • 0 Comments

17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதன்மைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்படி, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 9.30 க்கு முதல் கூட்டத் தொடர் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சட்டப் பேரவை உறுப்பினராக பதவியேற்குமாறு அந்த […]

உலகம் செய்தி

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக அமீரகம் அறிவிப்பு

  • May 10, 2026
  • 0 Comments

ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்களை தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 551 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,265 ட்ரோன்கள் (UAVs) எதிர்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ஹன்டா வைரஸ் பரவல் – பிரிட்டிஷ் நபருக்கு உதவ பாராசூட் மூலம் இறங்கிய மருத்துவக் குழு

  • May 10, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று சந்தேகிக்கப்படும் ஒரு பிரித்தானியர் ஒருவருக்கு உதவுவதற்காக, பிரித்தானிய இராணுவ மருத்துவக் குழு தொலைதூர அட்லாண்டிக் தீவான டிரிஸ்டன் டா குன்ஹா (Tristan da Cunha)வில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கொடிய வைரஸ் பரவல் ஏற்பட்ட எம்வி ஹோண்டியஸ் (MV Hondius) சொகுசுக் கப்பலிலிருந்து வெளியேறிய அந்த நபர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலில் இதுவரை ஆறு பேருக்கு தொற்று […]