இலங்கை செய்தி

சிசு மரணம்: திருகோணமலையில் இரு வைத்தியர்கள் பணி நீக்கம்!

  • May 11, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பணி புறக்கணிப்பின்போது, சிசுவொன்று மரணித்தமை தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரினது சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிசுவின் நிலை மோசமடைந்து வருவதாக வாட்டுக்கு பொறுப்பான வைத்தியர் 6 முறை தொலைபேசி மூலம் அழைத்தும், சம்பந்தப்பட்ட விசேட வைத்தியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசாரணைகளில் உறுதி […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்: விஜயிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில், மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முயற்சியிலேயே பாரிய சாதனை படைத்து முதலமைச்சராகப் […]

இலங்கை

திருத்தப்பட்ட புதிய மின்கட்டணம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது!

  • May 11, 2026
  • 0 Comments

இவ்வாண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் அமுலுக்கு வரவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவர சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதன்படி மின்சாரக் கட்டணங்களை 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்ததே இந்த மின்சாரக் கட்டண […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு 12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியது ஆஸ்திரேலியா!

  • May 11, 2026
  • 0 Comments

இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஆஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிரிஸ்ஸவில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே ட்ரோன்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்ரேலியாவின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் , இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 கண்காணிப்பு ட்ரோன்களையும் முறைப்படி கையளித்துள்ளார். இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் மற்றும் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். […]

உலகம்

அமெரிக்காவுடனான இராணுவ உறவை முறிக்க நெதன்யாகு விருப்பம்!

  • May 11, 2026
  • 0 Comments

வளைகுடா நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இஸ்ரேல் முனைந்து வரும் நிலையில், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அமெரிக்காவின் இராணுவ ஆதரவிலிருந்து இஸ்ரேலை விடுவிக்க விரும்புவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். நேற்று ஒளிபரப்பான பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ” அமெரிக்காவின் நிதி ஆதரவை நான் பூஜ்ஜியத்திற்குக் குறைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஆண்டுக்கு சுமார் 3.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவ உதவியைப் பெற்று வருவதாக […]

உலகம்

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

  • May 11, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்ததன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 104.1 டொலராகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 98.51 டொலராகவும் பதிவாகியுள்ளது.

உலகம்

ஈரானின் பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்!

  • May 11, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட தெஹ்ரானின் முன்மொழிவில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் ஈரான் மீண்டும் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் ஆகியவை அடங்கியிருந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப்,  “ஈரானியப் பிரதிநிதிகளின் பதிலை […]

இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, சில மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கைக விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிரிந்தி ஓயாவின் தனமல்வில பகுதியிலுள்ள நீர் மானியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், அங்கு தாழ் நில பகுதிகளில் வசிக்கும் […]

இந்தியா

பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துங்கள் – மோடி அறிவுரை!

  • May 10, 2026
  • 0 Comments

பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவதே தற்போதைய தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தெலங்கானாவில் மதிப்புமிக்க வளர்ச்சித் திட்டங்களை காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் . அது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரின் பாதகமான தாக்கத்தையும் குறைக்கும். கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் […]

உலகம்

பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நெதன்யாகு வெளியிட்ட செய்தி : அமைதி திரும்புமா?

  • May 10, 2026
  • 0 Comments

ஈரான் தனது திறன்களை தக்கவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளதாக தெரிவித்துள்ளார். CBS “60 Minutes, நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த செவ்வியில் மேலும் தெரிவித்த அவர், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் “பெரும்பான்மையானவற்றைச் சாதித்துள்ளது, ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை” என்று கூறியுள்ளார். ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவிடவில்லை, தனது அணுசக்தி தளங்களை அகற்றவில்லை, தனது பிராந்திய முகவர்களுக்கு ஆதரவளிப்பதை […]